For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அதிமுக 44.3%; திமுக 23.6%; பாஜக 5.5 % தேமுதிக 5.1% வாக்குகள் பெற்றன

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஒரு கோடியே 79 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 44.3% வாக்குகளுடன் ஆளும் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெறாவிட்டாலும் தங்களது வாக்கு சதவீதத்தை தக்க வைத்துள்ளன.

அதிமுகவுக்கு 44.3%

அதிமுகவுக்கு 44.3%

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஒரு கோடியே 79 லட்சத்து 76 ஆயிரத்து 364 வாக்குகள் கிடைத்துள்ளன. இது பதிவான மொத்த வாக்குகளில் 44.3 சதவீதமாகும்.

திமுக 23.6%

திமுக 23.6%

திமுகவுக்கு 95 லட்சத்து 73 ஆயிரத்து 287 வாக்குகள் கிடைத்துள்ளன. இது, பதிவான வாக்குகளில் 23.6 சதவீதமாகும். ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு 25.09 சதவீத வாக்குகள் கிடைத்தன.

பாஜகவுக்கு 5.5%

பாஜகவுக்கு 5.5%

பாரதிய ஜனதா கட்சி 5.5.% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது 22 லட்சத்து 21 ஆயிரத்துக்கு 141 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேமுதிக 5.1%

தேமுதிக 5.1%

தேமுதிகவானது 5.1% வாக்குகளைப் பெற்றுள்ளது. பதிவான வாக்குகளில் 20 லட்சத்து 79 ஆயிரத்து 392 வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.

பாமக 4.4%

பாமக 4.4%

பாட்டாளி மக்கள் கட்சிக்கு 4.4% வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தம் பதிவான வாக்குகளில் 18 லட்சத்து 4 ஆயிரத்து 812 வாக்குகள் அக்கட்சிக்கு கிடைத்தன.

காங்கிரஸ் 4.3%

காங்கிரஸ் 4.3%

காங்கிரஸ் கட்சிக்கு பதிவான வாக்குகளில் 4.3% வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தம் 17 லட்சத்துக்கு 49 ஆயிரத்துக்கு 718 வாக்குகள் காங்கிரஸுக்கு விழுந்துள்ளன.

மதிமுக 3.5%

மதிமுக 3.5%

மதிமுகவுக்கு 3.5% வாக்குகள் கிடைத்துள்ளன. பதிவான வாக்குகளில் 14 லட்சத்து 17 ஆயிரத்து 535 வாக்குகளை மதிமுக பெற்றுள்ளது.

சிறுத்தைகள் 1.5%

சிறுத்தைகள் 1.5%

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1.5% வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்துக்கு 110 வாக்குகள் கிடைத்துள்ளன

புதிய தமிழகம் 0.6%

புதிய தமிழகம் 0.6%

புதிய தமிழகம் கட்சிக்கு 0.6% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 812 வாக்குகள் அக்கட்சிக்கு கிடைத்திருக்கிறது.

மனித நேய மக்கள் கட்சி 0.6%

மனித நேய மக்கள் கட்சி 0.6%

மனித நேய மக்கள் கட்சி 0.6% வாக்குகளைப் பெற்றுள்ளன. மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 679 வாக்குகள் இது.

சி.பி.எம் 0.5%

சி.பி.எம் 0.5%

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 0.5% வாக்குகள் விழுந்துள்ளன. மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 614 வாக்குகள் கிடைத்துள்ளன.

சி.பி.ஐ - 0.5%

சி.பி.ஐ - 0.5%

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 0.5% வாக்குகள் கிடைத்தன. அதாவது மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 557 வாக்குகள் அக்கட்சிக்கு கிடைத்திருக்கிறது.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்

இக்கட்சியும் 0.5% வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 896 வாக்குகளைப் பெற்றிருக்கின்றன.

ஆம் ஆத்மி- 0.5%

ஆம் ஆத்மி- 0.5%

ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் 0.5% வாக்குகள் பெற்றுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 151 வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றது.

English summary
The AIADMK got best performance in Tamil Nadu in current Lok Sabha polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X