For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் எடப்பாடி பதவி விலகும் வரை போராட்டம்.. போலீஸ் வாகனத்தில் இருந்தபடியே ஸ்டாலின் பேட்டி

தூத்துக்குடி படுகொலைக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலகும் வரை திமுகவின் போராட்டம் தொடரும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது- வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடி படுகொலைக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலகும் வரை திமுகவின் போராட்டம் தொடரும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

    மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடி தனமாக தாக்குதல் காரணமாக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 25க்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர்.

    புறக்கணித்தனர்

    புறக்கணித்தனர்

    தூத்துக்குடி படுகொலையை தொடர்ந்து சட்டசபையின் அலுவல் ஆய்வு கூட்டத்தை திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் புறக்கணித்துள்ளது. தூத்துக்குடியில் இவ்வளவு பெரிய பிரச்சனை நடக்கும் போது இந்த கூட்டம் தேவையா என்று புறக்கணித்துள்ளனர்.

    பெரிய போராட்டம்

    பெரிய போராட்டம்

    அவர் அவையில் இருந்து வெளியே வந்த பின் சட்டசபையில் உள்ள முதல்வர் அறைக்கு வெளியே போராட்டம் செய்தனர். இதையடுத்து போலீஸ் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்ய முயற்சித்தது. பின் பெரிய தள்ளுமுள்ளுவிற்கு இடையில் போலீஸ் அவர்களை கைது செய்தது. இதனால் அங்கே பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    ஸ்டாலின் கைது

    ஸ்டாலின் கைது

    போலீஸ் வாகனத்தில் இருந்தபடியே ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.முதல்வர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும். தூத்துக்குடி சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். முதல்வர் மட்டுமில்லாமல் அவர்களுடன் துணை முதல்வர் அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.

    வழக்கு

    வழக்கு

    சென்னை டிஜிபி, தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் எல்லோரும் பதவி விலகும் வரை எங்களின் போராட்டம் தொடரும். என் மீது என்ன வழக்கு பாய்ந்தாலும் போராட்டம் தொடரும். எல்லா விதமான வழக்கையும் சந்திக்க தயார், என்று ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

    English summary
    Tamilnadu CM should resing on behalf of Sterlite massacre says, Stalin after gets arrested for protesting against TN CM outside the assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X