சென்னை கடற்கரை சாலையை ஸ்தம்பிக்க வைத்த திமுக எம்எல்ஏக்கள் கைது... பரபரப்பு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களை கைது செய்ததால், தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் நேற்று தமிழகமே பரபரப்பாக இருந்தது.

தமிழக சட்டசபையில் மழைகால கூட்டத்தொடர் நேற்று ஆரம்பித்தது. கூட்டம் தொடங்கியவுடன் மரணமடைந்த எம்.எல்.ஏக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tamilnadu, DMK cadres protested against dmk MLAs arrest

பிறகு திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க 6 கோடி வரை பேரம் பேசப்பட்டது என இரு எம்.எல்.ஏக்கள் பேசினார்கள் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ குறித்து கேள்வி எழுப்பினார்.

ஆனால் சபாநாயகர் தனபால், அந்த விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் பேச அனுமதிக்க முடியாது என கூறினார். இத்னால் எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர். அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுகவினரும் வெளியேற்றப்பட்டனர்.

அதனால், போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதைக் கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர் மற்றும் பெரிய நகரங்களில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் தமிழகமே பரபரப்பாக இருந்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dmk protested against assembly Speaker opposing to talk about bribery to Edappadi support MLAs and DMk MLAs arrested. In whole TN, DMK cadres protested against this arrest.
Please Wait while comments are loading...