For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்ணீரில் மிதக்கும் தமிழகம்.. லேட்டஸ்ட் நிலவரம் உடனுக்குடன்

By Chakra
Google Oneindia Tamil News

-வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி

-வெள்ளத்தில் சிக்கி படுகாயமடைந்தோருக்கு ரூ50,000 நிதி உதவி: பிரதமர் மோடி

-சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து ரயில்கள் இயக்கம் தொடக்கம்

-வெள்ளத்தை வடியவைத்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை

-வெள்ள நிவாரணப்பொருட்களில் முதல்வர் ஸ்டிக்கரை ஒட்டினால் கடும் நடவடிக்கை : போலீஸ் எச்சரிக்கை

-நேரடியாக புகார் அளிக்கலாம் - அமுதா ஐ.ஏ.எஸ் 9551555501

-ஜெயலலிதா ஸ்டிக்கரை ஒட்ட அதிமுகவினர் வற்புறுத்துவதாக வந்த புகாரை அடுத்து நடவடிக்கை

-நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

-வெள்ள நிவாரணம் பற்றி தேவையற்ற கருத்துக்களை சொல்வதா? - ஓ.பி.எஸ்

-சென்னை வெள்ள நிவாரணத்திற்கு சிங்கப்பூர் 75 ஆயிரம் அமெரிக்க டாலர் நிவாரண உதவி

-வெள்ள களப்பணியாளர்களை தடுக்கும் அதிமுகவினர் மீது புகார் அளிக்க போன் நம்பர் அறிவிப்பு

-044-28130787, 044-28132266, 044-28133510 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்

-கட்சியின் இ-மெயில் முகவரிக்கும் புகாரை அனுப்பலாம்

-சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில் இன்று இரவு 10.10க்கு இயக்கம்

-சென்ட்ரல் - ஈரோடு இடையே இரவு 10.40க்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

-சென்னை விமான நிலையங்கள் 8ம் தேதிவரை செயல்படாது

-பயணிகள் விமான சேவை 8ம் தேதிவரை செயல்படாது

-இந்திய விமான போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு

-மழையால் டிசம்பர் 2ம் தேதி முதல் சென்னை விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன

-சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை- இந்தியன் ஆயில் அறிவிப்பு

-சென்னையில் திறந்திருக்கும் 57 பெட்ரோல் பங்க் பெயர் விவரம் வெளியீடு

-தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

-சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் விட்டு விட்டு மழை பெய்யும்

-எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

-திருச்சிக்கு (02605) இன்று பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்

-எழும்பூரில் இருந்து மதுரைக்கு (02635) பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

---

சென்னை தற்போதைய நிலை
டிசம்பர் 5, 2015 காலை 9 மணி தகவல்படி

1. கோடம்பாக்கம் - யுனைட்டட் இந்தியா காலனி சாலைகள் காய்ந்துவிட்டன. நேற்று மாலை முதல் மின்சாரம் உள்ளது. இண்டர்நெட் வேலை செய்யவில்லை. நேற்று மாலை முதல் மழை இல்லை. கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

2. சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி - சூரியன் ஒளிவீசுகிறான். சாலைகள் காய்ந்து பாதுகாப்பாக உள்ளன.

3. வளசரவாக்கம் - தண்ணீரின் அளவு குறையவில்லை. மின்சாரம் & மொபைல் நெட் ஒர்க் இல்லை.

Tamilnadu flood live

4. நங்கநல்லூர் - ஒரு அடி தண்ணீரே உள்ளது. அதுவும் வேகமாக குறைந்து வருகிறது. நீர்தேக்கங்கள் இல்லை. இன்று காலை 11 மணியளவில் சிக்னல் கிடைக்கலாம்.
5. வெஸ்ட் மாம்பலம் லேக் வ்யூ சாலை - முழங்கால் அளவு நீர் வேகமாக குறைந்து வருகிறது.

6. அரும்பாக்கம் - நீர்த்தேக்கம் இல்லை. CMBT ல் இருந்து திருமங்கலம் நோக்கி போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.

7. புரசைவாக்கம் நெடுஞ்சாலை - மெயின் ரோட்டில் மழை, நீர்த்தேக்கம் இல்லை. சாலைகளில் சமாளிக்கும் அளவுக்கே தண்ணீர் ஓடுகிறது.

8. எக்மோர் - தெருவில் ஓடிக் கொண்டிருந்த கூவம் தண்ணீர் குறைந்துள்ளது. பல இடங்களில் மின்சாரம் வந்துவிட்டது.

9. பாரிஸ் - சூரிய ஒளி...! சவுகார்பேட்டையில் நீர்த்தேக்கமில்லை.

10. அயனாவரம் - மழை & நீர்த்தேக்கமில்லை. அண்ணா நகரிலும் அவ்விதமே. மின்சாரம் வந்துவிட்டது.

11. மாம்பலம் - தி.நகர் - பல இடங்களில் முழங்கால் அளவுக்கும் குறைவாகவே தண்ணீர் இருக்கிறது.

12. கோயம்பேட்டிலிருந்து கொளத்தூர் போகும் வழி முற்றிலும் சீராக உள்ளது.

13. முடிச்சூர் & தாம்பரம் பகுதிகளில் தண்ணீர் நன்கு வடிந்து விட்டது. 300 மீட்டர் தூரத்துக்கு மட்டும் 2-3 அடி நீர் முடிச்சூர் பகுதியில் காணப்படுகிறது. பல இடங்களில் மின்சாரம் வந்து விட்டது. மக்கள் மளிகை வாங்கி சமைக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி கவலையில்லை.

14. மேடவாக்கத்தில் இருந்து பள்ளிக்கரணை தாமரைக்குளம் வரை தண்ணீர் இல்லை. ஆனால் மின்சாரமும் மொபைல் நெட் ஒர்க்கும் இன்னும் கிடைக்கவில்லை.

15. தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம் வரை பேருந்துகளும் ஷேர் ஆட்டோக்களும் சென்று கொண்டிருக்கின்றன.

16. பக்கிங்காம் கால்வாய் முதல் ஈசிஆர் வரை (SNR to ECR Road) முழங்கால் அளவு தண்ணீர் உள்ளது.

17. காரப்பாக்கம் முழங்கால் அளவு தண்ணீர் உள்ளது.

18. திருவான்மியூர் சிக்னல் முதல் டைடல் வரை 3 அடி தண்ணீர் உள்ளது.

19. OMR ல் இருந்து சிட்டிக்கு பீக அடையார் பாலம், RA புறம், நந்தனம், ஜெமினி, செண்ட்ட்ரல், பூந்தமல்லி சாலை வழியாக செல்லலாம்.

20. கோடம்பாக்கம் பாலத்தில் இருந்து ஆழ்வார் திருநகர் வரை உள்ள ஆற்காடு சாலை சீராக உள்ளது.

21. அண்ணா சாலையில் இருந்து பீச் ரோடுக்கு ஆர்காடு சாலை வழியாக செல்லலாம்.

22. வேளச்சேரி - பேபி நகர், டான்சி நகர், பாரதி நகர், உதயம் நகர், VGP செல்வா நகர், வேளச்சேரி அண்ணா நகர் பகுதிகளில் 4 அடி உயரத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ளது. சில இடங்களில் கழுத்து வரை உள்ளது.

23. SRP டூல்ஸ் - டைடல் பார்க் ரோடு 3 டிச, 9 P.M. நிலவரப்படி மூடப்பட்டுள்ளது.

24. ஜாஃபர்கான் பேட்டை மற்றும் மேற்கு சைதாப்பேட்டையில் கழுத்தளவு தண்ணீர் உள்ளதால் மக்கள் படகுகளில் மீட்கப்படுகின்றனர்.

25. நாராயணபுரத்தில் இருந்து காமாட்சி மருத்துவமனை வரை கழுத்தளவு நீர் உள்ளது.

26. மஹாலிங்கபுரம் - வானம் தெளிவாக உள்ளது. நீர்த்தேக்கம் இல்லை.

தற்போதைய நிலவரம் அறிய விரும்பும் நண்பர்களுக்கு இதை அனுப்பி வைய்யுங்கள்

English summary
Get the information about Tamilnadu flood related incidents immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X