எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கு நடுவே ஆளுநர் உரை.. அரசுக்கு புகழாரம்.. புதிய திட்டங்கள் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இதை எதிர்த்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தன.

ஆளுநர் தனது உரையில் கூறியதாவது:

-உரையை நிறைவு செய்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

-ஆளுநர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாகத்தை சபாநாயகர் தனபால் வாசித்து வருகிறார்

-பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்க மானியம் அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம்-ஆளுநர்

-இரு சக்கர வாகன மானிய திட்டத்தில் உதவித்தொகை உச்சவரம்பு ரூ.20,000 இருந்து ரூ.25,000 உயர்வு-ஆளுநர்

-அண்ணா பல்கலை. மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காக ஜப்பான் உதவியுடன் புதிய திட்டங்கள் - ஆளுநர்

-மின்வாரியத்தின் நிதிநிலைமை சீரமைக்கப்பட்டுள்ளது - ஆளுநர்

-இதுவரை 1.88 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது - ஆளுநர்

-4 தொழிற்பூங்காக்கள் ஜப்பான் உதவியுடன் துவங்கப்பட உள்ளனர்-ஆளுநர்

-உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது-ஆளுநர்

-உலக முதலீட்டாளர் மாநாட்டால் 96341 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய அளவில் 61 திட்டங்களுக்கு ஒப்புதல்-ஆளுநர்

-தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 268 புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்-ஆளுநர்

-காவிரி மேலாண்மை வாரியத்தையும், முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வேண்டும்- ஆளுநர் உரையில் வலியுறுத்தல்

-2030ம் ஆண்டுக்குள் நிலைத்தக்க இலக்குகளை தமிழகம் எய்திவிடும்- ஆளுநர்

-முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும் - ஆளுநர்

-மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினையில், சட்ட உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு உறுதியாக உள்ளது - ஆளுநர்

-கறவை பசு, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் - ஆளுநர்

-2016 -17ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.2,478 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது - ஆளுநர்

-ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மத்திய அரசு உதவியுடன் ரூ.200 கோடி ஒதுக்கப்படும் - ஆளுநர்

-சென்னை மெட்ரோ ரயிலின் மீதமுள்ள வழித்தடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும்-ஆளுநர்

-இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க திறன் வளர்ப்பு பயிற்சி மையங்களை நடத்தி வருகிறோம்-ஆளுநர்

-உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழகம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது-ஆளுநர்

-சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு விரைவில் அனுமதியளிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்-ஆளுநர்

-16 மாவட்டங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை ஏற்படப்பட்டுள்ளது-ஆளுநர்

-கச்சத்தீவை மீட்க மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது; மீனவர் பிரச்சினை தீர கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு - ஆளுநர்

-தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது - ஆளுநர்

பட்டா மாறுதல் உட்பட இணையதளம் வழியிலான அரசு பணிகள் மக்களுக்கு பயனளிக்கிறது - ஆளுநர் -பேச்சு

-ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம் காட்டுகிறது - ஆளுநர்

-5 ஆண்டுகளில் 300 இ-சேவை மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் - ஆளுநர்

-தென்னையிலிருந்து நீரா பானம் தயாரிக்க தமிழக அரசு திட்டம்-ஆளுநர்

-ஹார்வார்டு பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைய ரூ.10 கோடி வழங்கிய முதல்வரை பாராட்டுகிறேன்

-தமிழக நலனுக்காக ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை

-கோதாவரி நீரை காவிரி நதிக்கு இணைக்க மத்திய அமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளதை வரவேற்கிறோம்

-சட்டம், ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது- ஆளுநர்

-மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் - ஆளுநர்

-பொருளாதார செழுமை, சமூகநீதிக்கான திட்டங்கள், கொள்கைகளை இயற்றி சிறந்த ஆட்சியை தொடர்ந்து வழங்கும் - ஆளுநர்

-கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழி தேசிய சாலையாக மேம்படுத்த திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது - ஆளுநர்

-வருவாய் குறைந்த போதிலும் மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

-மாவட்டங்களில் தொழில் முனைதல் மற்றும் ஊரக தொழிலை ஊக்குவிக்க உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனங்கள் அமைக்கப்படும் - ஆளுநர்

-வருவாய் குறைந்த போதிலும் தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது: ஆளுநர்

-கடைசி மீனவரை மீட்கும்வரை மீட்ப் பணியை மத்திய அரசு தொடர்கிறது- ஆளுநர்

-மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பான மீட்பு பணியில் ஈடுபட்டன-ஆளுநர்

-ஓகி புயல் பாதிப்பு நிவாரணமாக முதல்கட்டமாக ரூ.133 கோடி ஒதுக்கப்பட்டது

-முதல்கட்டமாக மத்திய அரசு ரூ.401 கோடியும் ரூ.4854 கோடியை நிவாரண நிதியாகவும் வழங்க கோருகிறேன்-ஆளுநர்

-கடைசி மீனவர் மீட்கப்படும்வரை அரசு மீட்பு முயற்சியை தொடரும்- ஆளுநர்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
First session of the Tamilnadu Assembly beginning today with Governor Banwarilal Purohit's customary New Year address to the House. Here you can find live updates.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற