செம்மரம் கடத்தியதாக 6 தமிழர்கள்... ஆந்திரா போலீஸ் கைது! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடப்பா: செம்மரம் கடத்தியதாகக் கூறி 6 தமிழர்களை ஆந்திரப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர வனப்பகுதியில் இருந்து செம்மரம் கடத்தப்படுவதாகக் கூறி அண்மை காலமாக தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யபப்ட்டு சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு ஆந்திர அரசு ஜாமீன் வழங்க மறுத்து வருகிறது.

 tamilnadu persond abducted red sanders in Andra

இந்நிலையில் கடப்பா அருகேயுள்ள வனப்பகுதியில் செம்மரத்தை வெட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அப்பகுதிக்கு போலீசார் விரைந்து வந்தனர்.

அப்போது, வழியில் பழுதாகி நின்ற காரை போலீசார் சோதனையிட்டனர். அதில் பல லட்சம் மதிப்புள்ள செம்மரம் இருந்துள்ளதைக் கண்ட போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த மரங்களைக் கடத்தியதாக 6 பேரைக் கைது செய்தனர். அந்த ஆறு பேரும் தமிழ் நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Andra police has arrested 6 Tamil persons for abducting red sanders. That red sanders worth about 30 lakhs rupees told police.
Please Wait while comments are loading...