For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்டுதோறும் அடித்து நொறுக்கும் டாஸ்மாக் வசூல்... போன வருஷம் ரூ. 26,188 கோடி வசூலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில் நடைபெறும் மது வசூல் ஆண்டுதோறும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட் பட்ஜெட்டில் கடந்த 2014-15ம் ஆண்டில் டாஸ்மாக் வசூல் ரூ. 26,188 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2015-16ம் ஆண்டில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் ரூ. 29,627 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Tasmac income on rise in TN

தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

அதில் உள்ள சில சிறப்பு அம்சங்கள்:

தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ. 1,42,681. 33
மூலதனச் செலவு ரூ. 27,213 கோடி
வருவாய் பற்றாக்குறை ரூ. 4,616 கோடி
சொந்த வரி வருவாய் ரூ. 96, 083.74 கோடி
வரி விலக்கு மூலம் இழப்பு ரூ. 650 கோடி
நிகரக்கடன் வரம்பு ரூ 32, 990 கோடி
மாநிலத்தின் மொத்தக்கடன் சுமை ரூ. 2,11,483 கோடி
டாஸ்மாக் மது விற்பனை மூலம் கடந்த 2014-15ல் கிடைத்த வருவாய் ரூ. 26,188 கோடி
015-16ல் டாஸ்மாக் மது விற்பனை இலக்கு ரூ. 29,627 கோடி
நகர்ப்புற வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.107 கோடி
வாழ்வாதார நிதி திட்டத்திற்கு ரூ. 255.04 கோடியாக நிதி உயர்வு
பசுமை வீடுகள் கட்ட ரூ. 1,260 கோடி
சென்னை மாநகர வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக ரூ. 500 கோடி
மின்சார மானியம் வழங்கிட ரூ.7,136 கோடி
மாணவ மாணவிகள் இலவச பஸ் பயணத்திற்கு ரூ. 480 கோடி
தமிழகத்தில் நதி நீர் இணைப்புத் திட்டத்தை அமல்படுத்த ரூ. 253 கோடி
ரேஷன் கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட திட்ட உணவு மானியத்திற்கு ரூ.5,300 கோடி
விலையில்லா கறவைப் பசு மற்றும் வெள்ளாடுகள் திட்டத்தின் கீழ் 12,000 கறவை பசு, 6 லட்சம் வெள்ளாடுகள்
விலையில்லா கறவை மாடுகள் வெள்ளாடுகள் வழங்க ரூ.241. 90 கோடி
தேங்கிக் கிடக்கும் வழக்குகளை பைசல் செய்ய தமிழகத்தில் புதிதாக 169 நீதிமன்றங்கள்
அம்மா உணவகம், அம்மா சிமென்ட், அம்மா உப்பு திட்டம் தொடரும்
சென்னையைப் போல, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்
மத்திய அரசின் தூய்மை இந்தியாத் திட்டத்திற்கு மாநில அரசின் சார்பில் ரூ. 350 கோடி நிதி
English summary
Tasmac income is on rise in TN every year. The state earned Rs 26,188 core in 2014- 15. And the state has put a task to earn Rs 29,627 கோடி in the year 2015-16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X