For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடே! ஓபிஎஸ் அதிமுகவின் சின்னம் இரட்டை இலை சின்னம் மாதிரியே இருக்கே!

ஓபிஎஸ் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரட்டை விளக்கு மின்கம்பம் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் போல இருப்பது அந்த அணியினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஸ் அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய இரட்டை விளக்கு மின்கம்பம் இரட்டை இலை சின்னம் போலவே இருப்பது அந்த அணியினரை உற்சாகமடைய வைத்துள்ளது.

அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அதிரடியாக நேற்று முடக்கி உத்தரவிட்டது. இதையடுத்து அதிமுகவின் சசிகலா, ஓபிஎஸ் கோஷ்டிகள் புதிய பெயர், சின்னம் கோரி இன்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தது.

இதுதான் கட்சி பெயர்கள்

இதுதான் கட்சி பெயர்கள்

இதனடிப்படையில் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக(புரட்சித் தலைவி அம்மா) என்றும் சசிகலா அணிக்கு அதிமுக (அம்மா) என்றும் பெயர்கள் வழங்கப்பட்டன. ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொப்பி சின்னம்

தொப்பி சின்னம்

சசிகலா அணிக்கு முதலில் ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதை அந்த கோஷ்டி ஏற்க மறுத்ததால் தொப்பி சின்னம் வழங்கப்பட்டது.

இரட்டை இலை போல இருக்கே..

இரட்டை இலை போல இருக்கே..

ஓபிஎஸ் அணிக்கு வழங்கப்பட்டுள்ள இரட்டை விளக்கு மின்கம்பம் பார்ப்பதற்கு முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

முதல் வெற்றி...

முதல் வெற்றி...

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியன், புரட்சித் தலைவி அம்மா என்ற பெயர் எங்கள் அணிக்கு கிடைத்தது முதல் வெற்றி. இரட்டை இலை சின்னம் போல தோற்றமளிக்கும் இரட்டை விளக்கு கம்பத்தை எங்கள் மேலிடம்தான் தேர்வு செய்தது என்றார்.

English summary
Team OPS now got Electric pole symbol for RK Nagar By Election. This Electric Pole comes closest to the ADMK's frozen Two Leaves symbol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X