அதிமுக இரு அணிகளும் இணையாமல் இருக்க பாஜக தான் காரணம் - தாக்கும் தமிமூன் அன்சாரி: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அதிமுக இரண்டாக பிளவடைவதற்கும் மீண்டும் ஒன்று சேராமல் இருப்பதற்கும் பாஜக தான் காரணம் என மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளரும் எல்.எல்.ஏவுமான தமிமூன் அன்சாரி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

ADMK MLA Thamimun Ansari Speech About OPS, EPS-Oneindia Tamil

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளரும் எல்.எல்.ஏவுமான தமிமூன் அன்சாரி,''வருமான வரித்துறை பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறது. அதிமுக இரண்டாக பிளவுபடுவதற்கு பாஜகவின் கைங்கர்யம் தான் காரணம்.

Thamimun Ansari MLA slammed BJP in Admk faction issue.

பிளவுபட்ட அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணையாமல் தடுத்து வருவது பாஜக தான். அதிமுகவை மத்தியில் ஆளும் பாஜக தான் சிதைத்து வருகிறது'' என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ தற்போது ஈபிஎஸ் அணியில் இருந்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் ஈபிஎஸ் அணி ஆதரவு வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு எதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Manithaneya makkal katchi general Secretary Thamimun Ansari MLA slammed BJP in Admk faction issue.
Please Wait while comments are loading...