For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த தங்கப்பேழை குறித்த சுவாரசிய தகவல்கள்!

முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த "தங்க" கண்ணாடிப் பேழை குறித்த சில சுவாரசிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழை அவருக்கென பிரத்தியோக மாக தயாரிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியுகியுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு சிகிச்சைப்பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மாலை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சாமாதி அருகே ராணுவ மரியாதையுடன் நல்அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், லட்சக்கணக்கான தொண்டர்கள் என அலையாய் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

தங்க கண்ணாடிப் பேழையில் உடல்

தங்க கண்ணாடிப் பேழையில் உடல்

முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தவுடன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம்
அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தங்க கண்ணாடிப் பேழையில் உடல் வைக்கப்பட்டு ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பேழை

பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பேழை

ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த தங்க கண்ணாடிப் பேழை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அந்த தங்கப்பேழை ஜெயலலிதாவுக்கு என பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கப்பேழையின் சிறப்பு

தங்கப்பேழையின் சிறப்பு

ஜெயலலிதாவின் உடல் தூரத்தில் இருந்து பார்க்கும் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக மேலே மூடப்படாமல் இருந்தது. இதனால் எடை காரணமாக உடல் நகருமோ என அவ்வப்போது அச்சம் ஏற்பட்டது.ஆனால் அவரது எடைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டதால் உடல் நகராமல் வைத்தது வைத்தப்படியே இருந்தது.

0-5 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சி

0-5 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சி

இந்த தங்க கண்ணாடிப் பேழை 0-5 டிகிரி செல்சியஸ் வரை உள்ளே வைக்கப்படும் உடலுக்கு குளிரூட்டும் வகையில் தயாரிக்கப்பட்டதாகும்.

3 நாட்கள் வரை உடல் கெடாது

3 நாட்கள் வரை உடல் கெடாது

இந்த கண்ணாடிப் பேழையில் வைக்கப்படும் உடல் குறைந்தது 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

1994ல் தொடங்கப்பட்ட நிறுவனம்

1994ல் தொடங்கப்பட்ட நிறுவனம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் 1994ஆம் ஆண்டு ஷாந்தகுமார் என்பவரால் இந்த சவப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.பிரபலங்களுக்கென சவப்பெட்டிகள் தயாரிக்கும் இந்நிறுவனம், அவரவர் உடற்வாகுக்கு ஏற்றார்போல் மாற்றங்களை செய்து தருகிறது.

பிரபலங்களுக்கான சவப்பெட்டிகள்

பிரபலங்களுக்கான சவப்பெட்டிகள்

இந்த நிறுவனம் பிரபலங்களுக்காக சவப்பெட்டிகளை செய்து தருகிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட மறைந்த பிரபலங்களுக்கு சவப்பெட்டி செய்து தரப்பட்டுள்ளது.

முன்னாள் பிரபலங்கள்

முன்னாள் பிரபலங்கள்

குறிப்பாக முன்னாள் பிரதமர் நரசிம்மா ராவ், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஆச்சி மனோரமா ஆகியோரின் உடல்கள் இந்நிறுவன பேழைகளில் வைப்பட்டுள்ளது. தென்னிந்திய அளவில் இறக்கும் பிரபலங்கள் அனைவருக்கும் இந்நிறுவனத்திலிருந்தே

முதல் பேழை

முதல் பேழை

இந்நிறுவனத்தின் முதல் பேழை மறைந்த முன்னாள் அமைச்சர் வி.ஆர் நெடுஞ்செழியனுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The coffin exclusively prepared for former TamilNadu Chief minister jayalalitha was made by the private company. the company that has built coffins of famous personalities. such as former Prime Minister Narasimha Rao and veteran actors sivaji ganesan and aachi Manorama in the past.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X