கனவு காணும்போது இருக்கும் சந்தோஷம் நனவாகும்போது இருக்காது.. சொல்கிறார் ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நாளை அந்த முக்கியமான தகவலை வெளியிடுவதை உறுதி செய்தார் ரஜினி

  சென்னை: கனவு காணும்போது இருக்கும் சந்தோஷம் நனவாகும்போது இருக்காது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

  நடிகர் ரஜினிகாந்த் கடந்த 26ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். 5வது நாளாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

  நாள்தோறும் புகைப்படம் எடுக்கும் முன்பாக ரஜினிகாந்த் ரசிகர்களிடம் தனது அனுபங்களை பகிர்ந்து கொள்கிறார். மேலும் எப்படி வாழ வேண்டும் என ரசிகர்களுக்கு அவர் அறிவுரையும் வழங்கி வருகின்றனர்.

  நனவாகும்போது இருக்காது..

  நனவாகும்போது இருக்காது..

  இன்று புகைப்படம் எடுக்கும் முன்பாக ரசிகர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது கனவு காணும் போது இருக்கும் சந்தோஷம் அது நனவாகும்போது இருக்காது என கூறினார்.

  நேர்மையான முறையில்..

  நேர்மையான முறையில்..

  தான் கனவு காண வேண்டாம் என கூறிவில்லை என்ற ரஜினிகாந்த் நேர்மையா முறையில் லட்சியத்தை அடைய முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

  தனக்கு மெட்ராஸ்தான்..

  தனக்கு மெட்ராஸ்தான்..

  கனவு நனவாகவில்லை என்றால் வருத்தப்பட தேவையில்லை என்றும் ரஜினிகாந்த் தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். தற்போது சென்னையாக மாறிவிட்டாலும் தனக்கு இது மெட்ராஸ் தான் என்று ரஜினி தெரிவித்தார்.

  நல்ல மதிப்பை பெறவேண்டும்

  நல்ல மதிப்பை பெறவேண்டும்

  2.O படம் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியாகும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். குடும்பம், உறவினர்கள், சுற்றுவட்டாரத்தில் நல்ல மதிப்பை பெற வேண்டும் என்று ரசிகர்களிடம் ரஜினிகாந்த் வலியுறுத்தினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth meets his fans as 5th day in Chennai. He says that The happiness wont be there when the dream comes true.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற