திருநாவுக்கரசரின் எடப்பாடி ஆதரவு மன நிலை.. நடராஜன் தரப்பினருடனான சமூக ரீதியிலான நட்பு காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சசிகலா தரப்புக்கு சாதகமாகவே பேசி நடந்து வருகிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். இதற்கு நடராஜன் தரப்பினருடனான சமூக ரீதியிலான நட்புதான் காரணமா என்ற கேள்விகளை பலரும் எழுப்பத் தொடங்கி விட்டனர்.

காரணம் ஆரம்பத்திலிருந்தே சசிகலா தரப்பைச் சேர்ந்தவர் போலவே திருநாவுக்கரசர் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சிக்காரர் போலவே அவர் செயல்படவில்லை என்ற பெரும் குற்றச்சாட்டை இளங்கோவன் போன்றோர் வலுவாக வைத்து வருகினறனர். அதற்கு விளக்கம் கூட கொடுப்பதில்லை திருநாவுக்கரசர்.

The reasons behind Thirunavukkarasar's pro Edappadi govt

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சசிகலா தரப்புடன் படு நெருக்கமானார் திருநாவுக்கரசர். அப்போதே அதை இளங்கோவன் விமர்சித்தார். பழைய அதிமுககாரராக மாறி விட்டாரா திருநாவுக்கரசர் என்றும் கேள்வி எழுப்பினார். திருநாவுக்கரசரும் கூட கிட்டத்தட்ட சசிகலா தரப்புக்கு உதவிகள் செய்வது போலவே நடந்து வந்தார்.

தற்போது கூட கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களை கொண்டு போய் அடைத்து வைத்திருப்பதும் கூட திருநாவுக்கரசர் கொடுத்த ஐடியாதான் என்றும் சிலர் சொல்கிறார்கள். முன்பு ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாக அதிமுக உடைந்தபோதும் திருநாவுக்கரசர் மற்றும் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர்தான் ஜெ. ஆதரவு எம்.எல்.ஏக்களை பஸ்களில் ஏற்றிப் பதுக்கி வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.

சசிகலா சிறைக்குப் போன பின்னரும் கூட திருநாவுக்கரசரின் நிலைப்பாடு மாறவில்லை. தற்போது அவர் எடப்பாடி அரசைக் காக்க தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் இன்று கூடிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி அரசுக்கு எதிரான முடிவை அவர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

திருநாவுக்கரசர் தொடர்ந்து இதுபோல சசிகலா தரப்புக்கு ஆதரவாக செயல்பட, நடராஜன்- சசிகலாவுடனான சமூக ரீதியிலான நட்புதான் காரணமா.. அதனால்தான் இப்படி எடப்பாடி அணிக்கு சாதகமான மன நிலையில் அவர் உள்ளாரா என்று பொதுமக்கள் உள்பட பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The friendship with Natarajan may be the main reason behind TNCC president Thirunavukkarasar's stand of pro Edappadi govt. Both beloned to same community.
Please Wait while comments are loading...