For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாக்டருக்கு படித்து சேவை செய்ய ஆசைப்படும் ஸ்டேட் செகண்ட், தேர்ட் வந்த விக்னேஷ், அபிதா

By Siva
Google Oneindia Tamil News

நெல்லை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் இரண்டாவது இடம் பிடித்த ராம்விக்னேஷ் மற்றும் 3வது இடம் பிடித்த அபிதா ரத்தினம் ஆகியோர் மருத்துவராக ஆசைப்படுகிறார்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 500க்கு 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாவது இடம் பிடித்த நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரோஸ் மேரி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் ராம்விக்னேஷ் தமிழில் 99 மதிப்பெண்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியலில் 100க்கு 100 மற்றும் அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

அவர் பிளஸ் ஒன்னில் முதல் குரூப் எடுத்து பிளஸ் டூ முடித்த பிறகு மருத்துவ படிப்பு படித்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறார்.

அபிதா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் லயன்ஸ் பள்ளி மாணவி அபிதா ரத்தினம் பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கத்தால் தான் தன்னால் சாதிக்க முடிந்தது என்று தெரிவித்துள்ளார் அபிதா. அவருக்கு எம்.பி.பி.எஸ். படிக்கவும், மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதவும் ஆர்வம் உள்ளது.

English summary
Palayamkottai student Ram Vignesh and Srivilliputhur girl Abitha Ratnam who secured state second and third place in SSLC exam want to become doctors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X