போர்ட் வசதிக்காக அலைமோதும் மக்கள்.. ஏர்செல் அதிகாரிகள் திணறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி : ஏர்செல் சேவை முடக்கத்தால் வேறு நிறுவனத்திற்கு மாற பொது மக்கள் அலை மோதி வருவதால் இதர சேவை நிறுவனங்கள் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்செல் நி்றுவனத்தில் கடந்த சில நாட்களாக சிக்னல் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. செல்போன் டவர்களுக்கு பாக்கி தொகை வழங்காததால் சேவை வழங்க முடியவில்லை என ஏர்செல் நிறுவனம் தெரிவித்தது.

Thirunelveli people facing tough time to change the aircel number

தகவல் ஒழுங்கு முறை ஆணையமும் ஏர்செல் நிறுவனம் திவாலாகி விட்டதாக தெரிவித்தது. இதையடுத்து வரும் 15ம் தேதி முதல் தனது சேவையை முற்றிலும் நிறுத்த போவதாக ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்ற பல்வேறு இடத்திற்கும் அலைந்து வருகின்றனர். போர்ட் வசதி மாற்றம் கோரி ஒரேநேரத்தில் மக்கள் நிறுவனங்களுக்கு படையெடுப்பதால் அவர்களை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thirunelveli people facing tough time to change the aircel number, as bulk number of people approaching for port change aircel officials were not able to handle them.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற