ரூ. 570 கோடியுடன் சிக்கிய திருப்பூர் கண்டெய்னர்.. இதற்குத்தான் இத்தனை பரபரப்பா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிப்பட்ட சம்பவம் முதல் இன்று வரை அந்த வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பங்களை காண்போம்.

Time line for Thiruppur Rs. 570 crores seized incident

மே 13, 2016- தமிழகச் சட்டசபை தேர்தல் நேரத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது.

ஜூன் 9, 2016- திருப்பூரில் 570 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து திமுக தொடர்ந்த வழக்கில் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 29, 2016- சிபிஐக்கு மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஜூலை 4, 2016- திருப்பூர் கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூ.570 கோடி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 8, 2016- ரூ.570 கோடி பிடிப்பட்டது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

ஜூலை 4, 2017- கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூ.570 கோடி பணம் வங்கிக்கு சொந்தமானது என்று சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Whart are the important incidents happened on Thiruppur Rs. 570 crore seized incident from today? A time line shows that.
Please Wait while comments are loading...