பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை முதல் நேரம் மாற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: ரயில் தண்டவாளத்தில் பணி காரணமாக தினமும் காலை 10.15 மணிக்கு மதுரைக்கு புறப்பட வேண்டிய பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை முதல் 12.15 மணிக்கு புறப்படும்.

Tiruchendur passenger rescheduled train

குமாரபுரம்- கோவில்பட்டி- நல்லி ஆகிய பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் ரயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Electric train derails near Ponneri

அதன்படி தினமும் காலை 10.15 மணிக்கு மதுரைக்கு புறப்படும் பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் (வண்டி எண்.56769 ) 12.15 மணிக்கு புறப்படும். வியாழக்கிழமை மட்டும் இந்த ரயில் மதுரையில் இருந்து சரியான நேரத்திற்கு புறப்படும் அதாவது காலை 10.15 மணிக்கு புறப்படும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Due to line block in connection with engineering work between Kumarapuram - Kovilpatti - Nalli sections the Palani – Tiruchendur passenger scheduled to leave Madurai at 10.15 hrs. will be rescheduled to leave Madurai at 12.00 hrs.
Please Wait while comments are loading...