டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு.. சென்னையைச் சேர்ந்த காயத்ரி முதலிடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த காயத்ரி முதலிடம் பெற்றுள்ளார்.

துணை ஆட்சியர், போலீஸ் துணை சூப்பிரண்டு, உதவி வணிகவரி அலுவலர், மாவட்டப் பதிவாளர்கள் உள்ளிட்ட 74 காலிப் பணி இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்றது.

TNPSC Group 1 results released

இதனைத் தொடர்ந்து, அதில் வெற்றி பெற்றவர்கள் முதன்மை தேர்வு அழைக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். கடந்த 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நேர்காணல் நடைபெற்றது.

இந்த நேர்காணலில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களின் முடிவு இன்று வெளியாகியுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். மணிராஜ் மற்றும் தனப்பிரியா ஆகியோர் முறைப்படி 2 மற்றும் 3ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadi Public Service Commission has released Group 1 results today.
Please Wait while comments are loading...