போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த வழக்கு... உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை செய்யப்பட இருக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வில் இன்று விசாரணை நடத்தப்படும்.

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் தமிழகம் முழுக்க போராட்டம் செய்து வருகின்றனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இவர்கள் போராடுகிறார்கள். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 7 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

Today court hears petitions on TN Bus strike

இந்த நிலையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே உயர்நீதி மன்றம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் ஓய்வூதிய நிலுவைத் தொகை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மணிக்குமார் அமர்வுக்கு இந்த வழக்கை கடந்த 8ம் தேதி மாற்றம் செய்தது. இதையடுத்து நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வில் இன்று விசாரணை நடத்தப்படும்.

ஏற்கனவே இந்த வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் தொழிற்சங்கங்களின் பதில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த ரூ. 5ஆயிரம் கோடியை அரசு திரும்ப வழங்காததே போராட்டத்திற்கு காரணம் என்று பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bus strike continues for 7th day in Tamil Nadu. Bus strike makes huge problem to common people. Workers says that bus strike will continue until all needs has clarified. Today Chennai High Court hears petitions on TN Bus strike.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X