சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு.. முதல்வர் பதிலுரையாற்றுகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஒருவாரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக சட்டசபை கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று தொடர்ந்து நிறைய முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Today is last day of TN assembly's first session

ஆர்.கே நகர் எம்.எல்.ஏ தினகரனின் முதல் சட்டசபை, தமிழக தங்க விழா கொண்டாட்டாட்டம், மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா என நிறைய முக்கிய மசோதாக்கள் இதில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் சட்டசபை உறுப்பினர்களின் சம்பளமும் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது.

மேலும் ஓகி புயல், நீட் என முக்கியமான விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட்டது. அமைச்சர்கள் தவறுதலாக சில வார்த்தைகளை பேசி செய்த காமெடியான சம்பவங்களும் நடந்தது.

இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த ஒருவாரமாக கூட்டத்தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிறைவு நாளில் முதல்வர் பதிலுரையாற்றுகிறார். மேலும் சில முக்கியம் மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
First Session of the Tamil Nadu Legislative Assembly started on Jan 8. Governor Panwari Lal Purohit inaugurated the assembly. Governor speaks about several issues of TN in assembly. New bills have passed in assembly. Today is last day of TN assembly's first session.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற