For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த "மாரத்தான்" அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் முடிந்தது

காவிரி விவகாரத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூடுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அனைத்து கட்சி கூட்டம்..காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்- வீடியோ

    சென்னை: காவிரி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்ட கடந்த 6 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்தது. இதில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் தரப்பு கருத்தை முன்வைத்தனர்.

    கடந்த 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கேரளம், புதுவை, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.

    இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் காவிரி நடுவர் மன்றம் அளிக்க உத்தரவிட்ட தண்ணீரை காட்டிலும் 14.75 டிஎம்சி குறைவாகவே விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சட்ட நடவடிக்கை

    சட்ட நடவடிக்கை

    மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இன்று முதல்வர் எடப்பாடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி 6 மணி நேரத்துக்கு பின்னர் முடிவடைந்தது.

    அரசியல் கட்சிகள்

    அரசியல் கட்சிகள்

    11 ஆண்டுகளுக்கு பிறகு, காவிரி பிரச்சினைக்காக இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் உள்ளிட்ட 54 அமைப்புகளுக்கு கலந்து கொண்டன.

    மேலாண்மை வாரியம்

    மேலாண்மை வாரியம்

    காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து மறுசீராய்வு மனு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அரசியல் தலைவர்கள்

    அரசியல் தலைவர்கள்

    இதில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி, தேமுதிக சுதீஷ், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, கொங்கு பேரவை சார்பில் தனியரசு, மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் தமிமுன் அன்சாரி, நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வருகை தந்தனர்.

    விவசாய அமைப்புகள் பங்கேற்பு

    விவசாய அமைப்புகள் பங்கேற்பு

    மேலும் பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜன், காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், மதிமுகவின் வைகோ, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், பாமக சார்பில் ஜிகே மணி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர். தலைமை செயலகத்தில் 10-ஆவது தளத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்து முடிந்தது.

    11 ஆண்டுகள் கழித்து

    11 ஆண்டுகள் கழித்து

    முன்னதாக 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெற்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பிரதமரை சந்திக்க...

    பிரதமரை சந்திக்க...

    இந்த கூட்டத்தில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கைகுலுக்கி வரவேற்றுக் கொண்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி, பிரதமரை நேரில் சந்தித்து மனு அளிப்போம் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    English summary
    CM Edappadi Palanisamy leads today the all party meeting in the issue of Cauvery water dispute. 43 organisations are called for this meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X