கும்பகரை அருவியில் வெள்ளம்... குளிக்கத் தடை... சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டத்திலுள்ள கும்பகரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம்,மேற்கு மலைத்தொடரில் கும்பகரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் நீராடச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு கடுமையான கோடையும் மழைப்பொழிவும் இல்லாத காரணத்தால் அருவி வறண்டு இருந்தது.

 Tourist restricted to take bath in Kumbakarai falls

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக இந்த அருவியில் நீர்வரத்து இருந்தது. அதைத் தொடர்ந்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதித்தனர்.

தற்போது கேரளாவில் பெய்து வரும் மழையால் இங்கு நீர்வரத்து மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று குளிக்கத் தடை விதித்துள்ளனர். இதனால் அருவியில் நீராட வரும் சுற்றுலா பயணிகள் பெருத்த ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As heavy water flow in Kumbakarai falls, tourists restricted to go to the falls by forest department
Please Wait while comments are loading...