For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடுவழியில் பழுதான லாரி.... தமிழக - கேரளா எல்லையில் 6 நேரம் போக்குவரத்து பதிப்பு

Google Oneindia Tamil News

புளியரை: தமிழக - கேரளா எல்லைப்பகுதியான புளியரையில் நடுவழியில் பழுதாகி நின்ற லாரியினால் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழக - கேரளா எல்லை நெல்லை மாவட்டம் புளியரை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் அத்தியாவசிய பொருள்கள்,பால்,காய்கறி,சிமிண்ட்,உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி சென்று வருகின்றன.

Traffic hit Tamil Nadu - Kerala border

இன்று அதிகாலை கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து சிமெண்ட் இறக்கிவிட்டு காலி லாரி ஒன்று செங்கோட்டை நோக்கி திரும்பி வைத்துக் கொண்டிருந்தது. அப்போது புளியரை எஸ் வளைவு பகுதியில் அந்த லாரி வரும்போது திடீர் என பழுது ஏற்பட்டு நடு வழியில் நின்றது.

Traffic hit Tamil Nadu - Kerala border

அதிகாலை நேரம் என்பதால் ஏராளமான வாகனங்கள் கேரளநோக்கி சென்றவை அனைத்தும் இந்த லாரி பழுது காரணமாக எஸ் வளைவுமுதல் கட்டளைக்குடியிருப்பு வரையிலும் சாலையில் வாகனங்கள் தேங்கி நின்றன.

Traffic hit Tamil Nadu - Kerala border

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தென்மலை முதல் கோட்டைவாசல் வரையும் தேங்கி நின்றன. சுமார் 6மணி நேரம் இரு மாநில எல்லைகளை எல்லைகளில் ஏற்பாட்ட வாகன நெருக்கடியால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபபட்டனர்.

சோதனை சாவடியில் போலீசார் குறைவாக இருப்பதால் அடிக்கடி நிகழும் வாகன நெருக்கடியை சீர்செய்ய சோதனை சாவடி காவல்துறையினர் திணறி வருவதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

English summary
Heavy traffic road on the Tamil Nadu-Kerala border Puliyarai near Shencottah on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X