For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓடும் ரயிலில் சில்மிஷம் செய்த ஜோடிகளை பிடித்து கொடுத்த பயணிகளுக்கு அபராதம்! இது ரயில்வே கூத்து!

By Veera Kumar
Google Oneindia Tamil News

மதுரை: ஜோடிகளின் சில்மிஷத்தை பொறுக்க முடியாமல் ரயில் அபாய சங்கிலியை இழுத்தவர்களுக்கு அபராதம் விதித்த ரயில்வே துறை, சில்மிஷ ஜோடியை கண்டுகொள்ளாமல் விட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஐந்தாம் தேதி மதுரையில் இருந்து சென்னை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொடைரோடு நிலையத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும், இளம் பெண்களும் முன்பதிவு பெட்டியில் ஏறினர்.

ஒரே படுக்கையில் உல்லாசம்

ஒரே படுக்கையில் உல்லாசம்

டிக்கெட் பரிசோதகர் வந்து பரிசோதனை முடித்துச் சென்ற சில நிமிடங்கள் கழித்ததும் தங்கள் சில்மிஷத்தை அவர்கள் ஆரம்பித்தனர். ஆளுக்கொரு படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தும்கூட ஒரே படுக்கையில், ஆணும், பெண்ணும் படுத்துக் கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட தொடங்கினர். இதைவிட மோசம் மற்றொரு படுக்கையில் நடந்தது. அங்கு ஒரே படுக்கையில் இரு ஆண்களும் நடுவில் ஒரு பெண்ணும் படுத்துக் கொண்டு ஆபாச செயல்களில் இறங்கினர்.

பயணிகளுக்கு தர்ம சங்கடம்

பயணிகளுக்கு தர்ம சங்கடம்

பிற பயணிகள் குறிப்பாக பெண் மற்றும் குழந்தைகள் வெட்கத்தால் தலைகுனிந்தனர். இதை பார்த்த ஆண் பயணிகள் சிலர் வட இந்திய ஜோடியிடம் அறிவுரை கூறினர். ஆனால் காமம் கண்ணை மறைத்ததால், அதனை அவர்கள் கேட்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் எச்சரித்தும் அவர்கள் அடங்குவதாயில்லை.

அபாய சங்கிலி

அபாய சங்கிலி

ரயில் அரியலூர் நிலையத்தை நெருங்கியபோது, பயணிகள் பொங்கியெழுந்தனர். அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தனர். ரயில் நின்றதும் மீண்டும் டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டனர். டிக்கெட் பரிசோதகர், அந்த வடமாநில இளசுகள் அனைவரையும் ரயிலை விட்டு கீழே இறங்கச் சொன்னார். அவர்களும் ஏதும் நடக்காததுபோல் இறங்கிச் சென்று விட்டனர்.

பாதுகாப்பு படை அட்டகாசம்

பாதுகாப்பு படை அட்டகாசம்

இதில் வேடிக்கை என்னவென்றால், ரயில்வே பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட பெட்டிக்கு வந்தனர். அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தது யார் எனக்கேட்டனர். அதில் 3 பயணிகள் தாங்கள்தான் இழுத்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண்களைப் பெற்ற பாதுகாப்பு படையினர் 2 நாளில் திருச்சி ரயில் நிலையத்துக்கு வர வேண்டும் எனக் கூறினர்.

ரூ.1000 கட்டுங்கள்

ரூ.1000 கட்டுங்கள்

செப்டம்பர் 8ம் தேதி திருச்சி வந்தபோதுதான் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததற்காக ரூ. 1000 அபராதம் செலுத்த வேண்டும் என்ற விஷயம் தெரியவந்தது. ஏன் எனக் கேட்டபோது, அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய குற்றத்துக்காக இந்த அபராதத்தை கட்ட வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறினர்.

ஜோடிகளுக்கு என்ன தண்டனை?

ஜோடிகளுக்கு என்ன தண்டனை?

சங்கிலியை இழுத்ததற்கு நாங்கள் ஃபைன் கட்டுகிறோம். ஆனால் அந்த இளசுகளின் அநாகரிக செயல்களுக்கு என்ன தண்டனை? அவர்களை யார் தண்டிப்பது, பொது இடங்களில் அப்படி நடக்கலாமா? என்ற பயணிகளின் கேள்விகளுக்கு ரயில்வேயிடமிருந்து பதில் இல்லை.

என்ன கொடுமை இது?

என்ன கொடுமை இது?

இதையடுத்து பயணிகள் ரயில்வே நீதிமன்ற நடுவரிடம் விஷயத்தை விளக்கியுள்ளனர். பாதுகாப்பு படையினரை அழைத்து "கடுமையாக கண்டித்த' நடுவர் குறைந்தபட்சமாக ரூ. 200 அபராதம் விதித்து சம்பவம் குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டார். அநாகரீகத்தை தட்டிக் கேட்டவர்கள் தண்டிக்கப்பட்டால், இனிமேல் யார் இப்படி தட்டிக்கேட்க முன்வருவார். யோசிக்குமா ரயில்வே துறை?

English summary
Train passenger who pulled emergency chain for handover youths who misbehave inside the train fined 1000 rupees by railway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X