தஞ்சையில் மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 1,000 பேர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சை : தஞ்சாவூரில் மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள் 5-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் போதிய அளவு இயங்கவில்லை.

குறைந்த அளவிலான பேருந்துகளை அண்ணா தொழிற்சங்கத்தினரும், தற்காலிக ஓட்டுநர்களும், ஆட்டோ டிரைவர்களும் இயக்கி வருகின்றனர். இதனால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்கின்றனர்.

Transport workers involved in road roko in Tanjore

இதுதொடர்பாக உயர்நீதிமன்றமும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப உத்தரவிட்டது. அவ்வாறு திரும்பாவிட்டால் சஸ்பெண்ட் ,பணி நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு ஆளாக நேரிடும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. எனினும் எதற்கும் அஞ்சாமல் தங்களது போராட்டம் தொடரும் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தஞ்சாவூரில் தமிழக அரசின் கவனத்தை தொழிலாலர்கள் ஈர்க்க சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடாததால் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவது பயணிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Transport workers involved in road roko in Tanjore. Police arrested 1000 workers.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X