ஊரான் வீட்டு நெய்யே... என் அண்ணன் பொண்டாட்டி கைய்யே... - கலக்கிய தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வை கலாய்த்த டிடிவி தினகரன்- வீடியோ

  சென்னை: எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது பற்றி பழமொழி கூறி கிண்டலடித்தார் சுயேச்சை எம்எல்ஏ டிடிவி தினகரன்

  சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த தினகரன், எடப்பாடி பழனிச்சாமி அரசை கடுமையாக சாடி பேசினார்.

  எம்எல்ஏக்களை தக்கவைக்க எடப்பாடி பழனிச்சாமி என்ன வேண்டுமானாலும் செய்வார். கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல ஊதிய உயர்வை கொடுத்துள்ளார் என்றார்.

  ஊரான் வீட்டு நெய்

  ஊரான் வீட்டு நெய்

  அவர் வீட்டு பணமா?யாருடைய பணமோதானே. 'ஊரான் வீட்டு நெய்யே... எங்க அண்ணன் பொண்டாட்டி கையேன்னு ஒரு பழமொழி இருக்கு... தஞ்சாவூர் மாவட்டத்தில அடிக்கடி சொல்வாங்க. தன் வீட்டு நெய்யை பத்திரமாக வச்சுக்கிட்டு அடுத்தவன் வீட்டு நெய்யை அள்ளி விடுவாங்க அந்த கதையா இருக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள ஊதிய உயர்வு.

  யார் வீட்டு பணம்

  யார் வீட்டு பணம்

  கடைத்தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல மக்கள் பணத்தை அள்ளி விடுவதா?
  என்றும் கேட்டார் தினகரன். தினகரனின் சொலவடைகளைக் கேட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சிரித்தனர்.

  ஐசியூவில் ஆட்சி

  ஐசியூவில் ஆட்சி

  நேற்றைய வெளிநடப்பின் போது அதிமுக ஆட்சி ஐசியூவில் இருக்கிறது என்றும் கூடிய விரைவில் வெண்டிலேட்டர் வைக்க வேண்டும் என்றும் கூறி ஷாக் கொடுத்தார் தினகரன்.

  இந்தப்பக்கம் வருவார்கள்

  இந்தப்பக்கம் வருவார்கள்

  எதிர்கட்சியில் என்னையும் சேர்த்து 100 பேருக்கு மேல் இருக்கிறோம். அந்தப்பக்கம் 104 பேர் இருக்காங்க. இன்னும் 4 அல்லது 5 பேர் எங்கள் பக்கம் வந்தால் என்னவாகும் என்றும் கேட்டுள்ளார் தினகரன். தினகரன் பேசுவதைப் பார்த்தால் கூடிய சீக்கிரம் வெண்டிலேட்டர் வைத்து விடுவார் போல இருக்கே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran has teased CM Edappadi Palanisamy for giving pay hike to the MLAs to keep them with him. He was addressing the press today.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற