ஆமைத் தலையர் ஜெயக்குமார், இடிச்சப்புளி பழனிச்சாமி.. மிஸ்டர் தினகரன் இது உங்களுக்கே நல்லா இருக்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி-வீடியோ

  சென்னை: அமைச்சர் ஜெயக்குமாரை ஆமைத் தலையர் ஜெயக்குமார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இடிச்சப்புளி பழனிச்சாமி என்றும் டிடிவி தினகரன் உருவ கேலி செய்து பேசியிருப்பது முகம் சுளிக்கவைக்கிறது.

  ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பின்பு அதிமுக அமைச்சர்களை டிடிவி தினகரன் விளாசி வருகிறார். அவரது ஆதரவாளர்களும் வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர்.

  தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வாய்க்கு வந்தபடி தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர்.

  பேச்சில் அதிக நக்கல்

  பேச்சில் அதிக நக்கல்

  ஆனால் அதனை கண்டிக்க வேண்டிய டிடிவி தினகரனோ அவற்றையெல்லாம் ரசித்து வருகின்றனர். எப்போதும் சிரித்த முகத்தோடு கூலாக பேட்டியளித்து வரும் தினகரன் நேற்று முதல் அதிக நக்கலோடு பேசி வருகின்றார்.

  ஆமைத்தலையர் ஜெயக்குமார்

  ஆமைத்தலையர் ஜெயக்குமார்

  இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் அமைச்சர் ஜெயக்குமாரை ஆமைத் தலையர், காமெடியன் என சரமாரியாக கிண்டலடித்தார். அவரது பேச்சில் அப்படி ஒரு கிண்டலும் கேலியும் தெரிந்தது.

  இடிச்சப்புளி பழனிச்சாமி

  இடிச்சப்புளி பழனிச்சாமி

  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் டிடிவி தினகரன் விட்டு வைக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை இடிச்சப்புளி பழனிச்சாமி என கிண்டலடித்தார் டிடிவி தினகரன்.

  அழகா மிஸ்டர் தினகரன்

  அழகா மிஸ்டர் தினகரன்

  கட்சிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கட்டும் முதல்வர் மற்றும் அமைச்சருக்கு வழங்கவேண்டிய குறைந்தபட்ச மரியாதையை கூடவா கொடுக்க தெரியாது தினகரனுக்கும் அவரது சகாக்களுக்கும்.
  உருவ அமைப்பை வைத்து ஒருவரை இப்படி கேலியாக பேசுவது ஒரு தலைவருக்கு அழகா மிஸ்டர் தினகரன்..

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran teasing minister Jayakumar as tortoise header. He also said Edappadi palnisami as Idichapuli palanisami.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X