இது புயலா?... இல்ல இதுதான் உங்க புயலா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடா புயலின் புண்ணியத்தில் சென்னையில் நேற்று ஒரு நாள் மழை பெய்தது. நீண்ட நாட்கள் பெய்த மழையை ஆசையுடன் அனுபவித்த மக்கள், சமூக வலைத்தளங்களில் தங்களின் உணர்வுகளை பதிவிட்டனர்.

மழைக்கால காளான்கள்தான் பார்த்திருப்போம். மழைக்கால கவிஞர்கள் பலரும் தங்களின் உற்சாகத்தை பதிவிட்டனர். மழை நீடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒருநாள் மழையோடு நின்று போனது பலருக்கும் ஏமாற்றம்தான்.

மழைக்கு இதமா இஞ்சி டீ

மழைக்கு சூடா வடையைக் கடிச்சு டீ குடிச்சா நல்லாத்தான் இருக்கும். இஞ்சி டீ குடிக்க வாங்க என்று கூப்பிட்டிருக்கிறார் இந்த வலைஞர்.

மழை கவிதை

மழை ரசிகர் ஒருவர் எழுதிய ஒற்றை வரி கவிதை... சாமான்யர்களைக் கூட கவிஞராக மாற்றி விடும் சக்தி படைத்தது மழை.

பனியை கலைத்த மழை

சில வாரங்களாகவே பனி கொட்டி குளிர் வாட்டியது. திடீரென்று மழை பெய்யவே ரசனையாய் பதிவு செய்துள்ளார் இந்த வலைஞர்.

மண் வாசம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை பெய்தல் மண்ணில் இருந்து எழும் வாசனையை அனுபவிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அவர்களுக்காகவே இந்த வலைஞரின் கவிதை.

ஜன்னல் ஓர இருக்கை

ரயிலோ, பேருந்தோ ஜன்னல் ஓர இருக்கைக்கு தனி மவுசுதான். பயணிகளின் பலரது விருப்பதும் ஜன்னல் ஓர இருக்கைதான். அதுவும் லேசான சாரல் மழை பெய்தால் அதை ரசித்துக்கொண்டே பயணிக்க பலரது மனது ஏங்கத்தான் செய்யும்.

மழை காதலன்

மழையை காதலியாக பாவிக்கும் இந்த வலைஞருக்கு அழுகையாக தெரிகிறது. எவ்வளவு அழுதாழும் ரசிப்பாராம்.

இதுதான் உங்க புயலா?

புயலால் மழை கொட்டும்னு சொன்னீங்களே? சத்தமில்லாம கரையை கடந்திருச்சே என்பதுதான் சென்னைவாசிகளின் கேள்வி. அதை வேலையில்லா பட்டதாரி பட விவேக் வசனத்தின் பாணியில் கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nettisions comments in twitter about Nada Cyclone and Rain.here is some twitts read and enjoy.
Please Wait while comments are loading...