ரஜினி அரசியல்.. நான் எந்த கருத்தும் சொல்ல மாட்டேன்.. வைகோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி அரசியல் கட்சி துவங்குவது குறித்து தான் எந்த கருத்தும் கூறமாட்டேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை எழும்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதுபோதும் மத்திய அரசு அதனை நிறைவேற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

வாக்குக்காக பேசவில்லை

வாக்குக்காக பேசவில்லை

மேலும் தான் வாக்கு வங்கிக்காக பேசவில்லை என்ற வைகோ தமிழக மக்களின் நலனுக்காகவே பேசுகிறேன் என்றார். இலங்கையில் தமிழர்களுக்கு இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

பொதுவாக்கெடுப்பு..

பொதுவாக்கெடுப்பு..

ஸ்காட்லாந்து தனிநாடு ஆவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த உள்ளனர். புலம்பெயர் வாழ் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

யாருக்கும் உரிமையுள்ளது

யாருக்கும் உரிமையுள்ளது

ஊழலற்ற அரசு அமைய வேண்டும் என்பதே மதிமுகவின் அடிப்படை கொள்கை என்றம் அவர் கூறினார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ ஜனநாயக நாட்டில் யாருக்கும் அரசியல் கட்சி ஆரம்பிக்க உரிமையுள்ளது என்றார்.

கருத்து சொல்ல மாட்டேன்

கருத்து சொல்ல மாட்டேன்

ரஜினி அரசியல் கட்சி துவங்குவது பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல மாட்டேன் என்றும் வைகோ தெரிவித்தார். ஆன்மீக அரசியல் என்பதை என்ன பொருளில் கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MDMK general secratary Vaiko refused to talk about Rajinikanth political arrival. Vaiko accusses central govt trying to implement hydro carbon project in Tamilnadu.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற