நெருக்கடி சூழலில் சவால்கள் நிறைந்த பட்ஜெட் - வைகோ பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக நின்றுவிடாமல், செயல்படுத்தினால் தமிழகத்திற்கு பெரும் பயன் அளிக்கும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நெருக்கடிகள் மிகுந்த சூழலில், சவால்கள் நிறைந்த நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

தமிழக சட்டசபையில் 2017-18-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ
வெளியிட்டுள்ள அறிக்கை:

பாராட்டு

தமிழக அரசின் 2017-18 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் 200 புதிய ஆவின் பாலகங்கள்

ஏற்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு பாராட்டத்தக்கது.

ஏமாற்றம்

கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கிற சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை மேம்படுத்த உரிய திட்டங்கள் இல்லாமல், அத்துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும்,

விவசாயிகள் மரணம் மற்றும் உரிய நிவாரனம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கவலை

தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை ரூபாய் மூன்று இலட்சம் கோடி என்றும், நிதிப்பற்றாக்குறை 41,977 கோடி என்றும் நிதி அமைச்சர் கூறி இருப்பதும் கவலை அளிக்கிறது.
பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக நின்றுவிடாமல், செயல்படுத்தினால் தமிழகத்திற்கு பெரும் பயன் அளிக்கும்.

நெருக்கடி சூழ்நிலை

கடுமையான நெருக்கடிகள் மிகுந்த சூழலில், சவால்கள் நிறைந்த நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார் என்றும் வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MDMK general secretary today welcome Tamil Nadu budget 2017.
Please Wait while comments are loading...