வேடசந்தூர் மாஜி அதிமுக எம்.எல்.ஏ. ஆண்டிவேல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. பரபர பின்னணி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  Former Vedasandur AIADMK MLA Andivel was found de@d in his farm house | Oneindia Tamil

  திண்டுக்கல்: வேடசந்தூர் மாஜி அதிமுக எம்.எல்.ஏ. ஆண்டிவேல் அவரது தோட்டத்தில் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

  2001-2006 ஆம் ஆண்டு வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆண்டிவேல். அப்போது ஈமு கோழி விவகாரத்தில் சிக்கி ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்.

  அதன்பின்னர் அதிமுகவினருடனான தொடர்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் சடலமாக ஆண்டிவேல் நேற்று கண்டெடுக்கப்பட்டார்.

  வெட்டு காயங்கள்

  வெட்டு காயங்கள்

  முகத்தாடையில் வெட்டு காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. வேடசந்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது முகத்தாடை, கணுக்கால் என பல இடங்களில் காயம் இருந்தது தெரியவந்தது.

  ஓட ஓட விரட்டி வெட்டி கொலை?

  ஓட ஓட விரட்டி வெட்டி கொலை?

  இதனால் தோட்டத்தில் ஆண்டிவேல் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டி கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கூடுதல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆண்டிவேல் உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

  ஈமு கோழி மோசடி

  ஈமு கோழி மோசடி

  ஈமு கோழி விவகாரத்தில் பல லட்சம் ரூபாயை பொதுமக்களிடம் இருந்து ஆண்டிவேல் ஏமாற்றினார் என்பது தொகுதி மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இப்படி ஏமாந்தவர்கள்தான் ஆண்டிவேலை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

  சொத்து தகராறு காரணமா?

  சொத்து தகராறு காரணமா?

  அதேபோல் குடும்பத்தில் சொத்து தகராறும் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரத்திலும் ஆண்டிவேல் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Vedasandur Ex MLA Andivel (60) found dead under suspicious circumstances near Eriyodu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற