கொரோனா உருமாறிய மாதிரி.. சமஸ்கிருதம் உருமாறி நீட் தேர்வாக வந்துள்ளது.. தடதடக்கும் கி.வீரமணி
திருப்பத்தூர்: கொரோனா வைரஸ் உருமாறி வருவதை போல சமஸ்கிருதம் உருமாறி நீட் தேர்வாக வந்துள்ளதாக திருப்பத்தூரில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்தார்.
நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு, நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து திராவிடர் கழகம் சார்பில் பரப்புரை பயணம் பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருப்பத்தூர் அடுத்த இஸ்மாயில் பேட்டையில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய கி வீரமணி கொரோனா என்கிற நோயை விட கொடியது நீட் தேர்வு. கொரோனா நோய் வந்தாலும் தடுப்பூசி போட்டு தப்பித்துக் கொள்ளலாம்.

இரண்டு முறை
நானே இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கிறேன். 100 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பிள்ளைகள் எல்லாம் மருத்துவர்களாக முடிந்ததா? அப்போதெல்லாம் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவராக முடியும். மருத்துவத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

மருத்துவர்கள்
ஆனால் இப்போது திரும்புகிற திசையெல்லாம் நம்முடைய பிள்ளைகள் மருத்துவர்களாக இருக்கிறார்கள். பெரியாரும் நீதி கட்சியும் தான் அதற்கு காரணம். கொரோனா எப்படி உருமாறி நம்மை தாக்குகிறதோ அதே போல் சமஸ்கிருதம் நீட் தேர்வாக இப்போது உருமாறி நம்மை தாக்குகிறது.

பழைய குலவழிக் கல்வி
தேசியக் கல்வி கொள்கை வந்துவிட்டால் பழைய குலவழிக் கல்வியை வலியுறுத்துவதாக அமைந்துவிடும். 3ம் வகுப்பு படிக்கும் குழந்தை முதல் 12 ஆம் வகுப்பு படிப்போர் வரை அனைவருக்கும் பொதுத் தேர்வு என்றால் அவர்களால் எப்படி படிக்க முடியும்.

கல்வியை பாதியில் நிறுத்திவிட்டால்...
கல்வியை பாதியில் நிறுத்திவிட்டால் பெற்றோர் செய்யும் தொழிலை செய்ய தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. இது போன்ற பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த ஒரே தலைவர் தந்தை பெரியார். அவர் குரலுக்கு செவி சாய்த்து ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர் காமராஜர் என வீரமணி பேசியிருந்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications