காதலியை அழைத்து வந்து திருமணம்.. காதலன் குடும்பத்தினருக்கு சரமாரி வெட்டு - வேளாங்கண்ணியில் பரபரப்பு!
நாகை: வேளாங்கண்ணிக்கு காதலியை அழைத்து வந்து திருமணம் செய்த காதலன் உள்ளிட்ட குடும்பத்தினரை சரமாரியாக வெட்டிவிட்டு, பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேளாங்கண்ணியில் மதம் மாறி மணம் முடித்ததால் மணமகன் குடும்பத்தினரை வெட்டிய மணமகள் குடும்பத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் நாகவாடா பகுதியைச் சேர்ந்த டேனியல் என்பவரின் மகன் ராகுல் (22) தொட்டி குண்டாவைச் சேர்ந்த ராஜாராவ் மகள் கீர்த்தனாவை காதலித்தார். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் புதன்கிழமை வேளாங்கண்ணியில் திருமணம் செய்தனர். ராகுலின் தந்தை டேனியல் (49), தாய் கலையரசி (41), உறவினர் பிரகாஷ் (34) ஆகியோர் திருமணத்திற்கு ஆதரவாக உடன் தங்கியிருந்தனர்.

இதையறிந்த கீர்த்தனாவின் உறவினர்கள் வியாழக்கிழமை வேளாங்கண்ணிக்கு வந்து, அவர்கள் தங்கியிருந்த விடுதியில் ராகுல் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டி, கீர்த்தனாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். காயமடைந்த ராகுல் உள்ளிட்டோர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பெண்ணின் குடும்பத்தார் சென்ற காரை விரட்டிச் சென்றனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே சென்ற பெங்களூரைச் சேர்ந்த குபேந்திரா ராவ் மகன்கள் வெங்கோராவ் (30), ராம்நாத் ராவ் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, பெண்ணின் தாய், தந்தை உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications