திருமண வரம் தரும் வேந்தர் டிவியில் மனம்போல் மாங்கல்யம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேந்தர் டிவியில் ஞாயிறு தோறும் காலை 8.30 மணிக்கு மனம்போல் மாங்கல்யம் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சி பொதுமக்களின் நலன்கருதி நடத்தப்படுகிறது. உரிய வயதைக் கடந்தும் திருமணம் கைகூடாத இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களின் நன்மைக்காக 'சுயம்வர பார்வதி யாகம்' நடத்தப்படுவதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் ஆகும்.

ஆணோ பெண்ணோ திருமணம் என்பது முக்கிய கால கட்டம். திருமணத்திற்கு வரன் தேர்வு செய்வது ஒரு வரம் போல செய்ய வேண்டியுள்ளது. அவர்களுக்காகவே இப்போது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

வேந்தர் டிவியில் நிகழ்ச்சி

வேந்தர் டிவியில் நிகழ்ச்சி

ஜாதகத்தில் உள்ள தோஷங்களால் ஏற்படும் தடைகளை நீக்க உதவும் இந்த சுயம்வர பார்வதி யாகத்தினை தனியொரு நபர் எளிதாக செய்ய இயலாது என்பதை உணர்ந்து பலபேரின் நன்மைக்காக இந்த யாகத்தினை எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக வேந்தர் டிவி முன்னின்று நடத்துகிறது.

சுயம்வர பார்வதி யாகம்

சுயம்வர பார்வதி யாகம்

தமிழ் மேட்ரிமோனி வேந்தர் டிவியுடன் இணைந்து நடத்தும் சுயம்வர பார்வதி யாகம் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நடதப்படுவது இன்னொரு சிறப்பம்சம் ஆகும்.

திருமணம் நடைபெற வேண்டுதல்

திருமணம் நடைபெற வேண்டுதல்

இதுவரை வேலூர், திருச்சி, பவானியில் நடைபெற்ற யாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டிக்கொண்டனர்.

கும்பேஸ்வரர் கோவிலில் யாகம்

கும்பேஸ்வரர் கோவிலில் யாகம்

தற்போது கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற யாக நிகழ்வுகளும், கலந்து கொண்ட வரன்களின் விவரங்களும் நான்கு பகுதிகளாக ஒளிப்பரப்பாகிறது.

மனம் போல மாங்கல்யம்

மனம் போல மாங்கல்யம்

எல்லாரும் தடைகள் விலகி, திருமண பந்தத்தில் இணைந்து மனம்போல் மாங்கல்யம் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்படும் இந்த நிகழ்ச்சி நேயர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வரன்கள் அறிமுகம்

வரன்கள் அறிமுகம்

இந்த நிகழ்ச்சியின் போதே வரன்களையும் அறிமுகம் செய்கின்றனர். இந்த நிகழ்ச்சி வேந்தர் டிவியில் ஞாயிறு தோறும் காலை 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vendhar Tv brings to our viewers Manam Pol Maangalyam. A show to remove all the obstacles in the process of marriage and find out the perfect partner as a better half for a happy life.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற