“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்
சென்னை: "காவி உடையில் இருந்த திருவள்ளுவரை வெள்ளை உடைக்கு மாற்றியதே திமுக தான், ஜோசப் விஜய், 'தான் ஒரு கருணாநிதி' என்பதை ஒவ்வொரு செயலிலும் நிரூபித்து வருகிறார்." என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
திருவள்ளுவர் திருநாள் விழா நேற்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், வைக்கப்பட்டிருந்த பேனரில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போலவும், அவரது கைகள் மற்றும் நெற்றியில் திருநீறு பூசப்பட்டிருப்பது போலவும் புகைப்படம் இடம்பெற்றிருந்த நிலையில், அது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் பயன்படுத்திய திருவள்ளுவர் புகைப்படத்துக்கு காவி உடை அணிவித்ததற்கு திமுக உள்பட பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. தவெக சார்பில் அமைச்சர் அருண்ராஜ், கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், தவெக அரசை பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான 'மக்கள் மாளிகை'யில், நேற்று திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது. 'திருவள்ளுவர் திருநாட் கழகம்' என்ற அமைப்பு நடத்திய இந்த விழாவில், காவி உடையுடன் திருவள்ளுவர் படம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்படத்திற்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதற்கு வழக்கம்போல, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக, மதிமுக போன்ற கட்சிகளுக்கு, காவி நிறமும் ஆகாது. இந்து மத சின்னங்கள் எதுவும் ஆகாது. அவர்களின் இந்து மத வெறுப்பு எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டோம் என்று ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர், திமுக ஆட்சியை அப்படியே தொடர்ந்து வருகின்றனரோ என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் நடந்த அத்தனை சட்டம் ஒழுங்கு சீரழிவுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வழக்கம் போல தொடர்கின்றன. முன்பு திமுக அமைச்சர்கள், இந்து மதத்திற்கு எதிராக வெறுப்பை உமிழ்வார்கள். இப்போது தவெக அமைச்சர்களும் அதையே செய்கிறார்கள். தவெக ஆட்சி என்பது தமிழ்நாட்டின் தொடக்கமல்ல; திமுகவின் தொடர்ச்சி என்பதை கடந்த மூன்று வாரங்களாக நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
"திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, அவரது தத்துவத்திற்கு எதிரானது" என்று அமைச்சர் அருண்ராஜ் கூறியிருக்கிறார். திருக்குறளில் பிறவி, ஊழ், தவம், அறம் போன்ற இந்துமத கருத்துக்கள் எங்கும் நிறைந்திருக்கின்றன. "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து!"ஒரு பிறவியில் கற்ற கல்வி, மனிதனுக்கு ஏழு பிறவியிலும் துணை நிற்கும் என்று திருவள்ளுவர் கூறியது இந்து மதக் கோட்பாடு இல்லையா? "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்" இதுபோல இந்து மத கருத்துக்களைச் சொல்லும் குறட்பாக்கள் ஏராளம் உள்ளன.
ஆனால், திமுகவின் இந்து மத வெறுப்பைத் தன் கொள்கையாகக் கொண்டுள்ள தவெகவினருக்கு என்ன சொன்னாலும் புரியப் போவதில்லை. காவி உடையுடன், இந்து மத அடையாளங்களுடன் இருந்த திருவள்ளுவரை வெள்ளை உடைக்கு மாற்றியதே முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தான். முதல்வர் ஜோசப் விஜய்யை, அவரது கட்சியினர், எம்ஜிஆர் என்று கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஜோசப் விஜய்யோ, 'தான் ஒரு கருணாநிதி' என்பதை ஒவ்வொரு செயலிலும் நிரூபித்து வருகிறார். திமுக வழியில் பயணிக்கும் தவெகவை, திமுகவைப் போல தமிழ்நாட்டு மக்கள் வீழ்த்துவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications