மெர்சல் பட காட்சிகளை நீக்குவதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் எதிர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் பட காட்சிகளை நீக்குமாறு ஆளும் கட்சி கூறக் கூடாது என்று இயக்குநரும், நடிகர் விஜயின்தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

மெர்சல் பிரச்சினை குறித்து முதல் முறையாக இந்தியா டுடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

Vijay's father, the filmmaker SA Chandrasekar, defended the Mersal

இந்திய நாட்டின் குடிமகனாக நான் பேசுகிறேன்.

கருத்து சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம். அரசியல் தொடர்புள்ளவர்கள்தான் சென்சார் வாரியத்திலும் உள்ளனர். அவர்கள்தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி கொடுத்துள்ளனர். அப்படியிருக்கும்போது, இப்போது பிரச்சினை எங்கிருந்து வந்தது? எந்த ஒரு கொள்கையையும் குற்றம்சாட்ட நம்மால் முடியும்.

ஆனால், சென்சார் அனுமதித்த ஒரு படத்தில் காட்சிகளை நீக்க ஆளும் கட்சி சொல்கிறது. அவர்கள் ஏன் இதை அரசியலாக்குகிறார்கள்? என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vijay's father, the filmmaker SA Chandrasekar says, As a citizen of India I am talking. There should be freedom of expression. Ruling party cannot ask for the scenes to be removed after the movie has been cleared by the censor"

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற