For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தின் புதிய ஆளுநரை நேரில் சந்தித்து வாழ்த்திய விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேரில் சந்தித்து பேசினார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நேற்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பங்கேற்று ஆளுநரை வாழ்த்தினர்.

Vijaykanth meets Governor

விஜயகாந்த் நேற்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் ராஜ்பவன் சென்ற தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வாழ்த்து கூறினார். அவருடன் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் உடன் சென்றார்.

தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லை. நிலையான ஆளுநரும் இல்லை என்று கூறி வந்தார் விஜயகாந்த்
நிரந்தர ஆளுநர் பதவியேற்ற பின்னர் நேரடியாக சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார் விஜயகாந்த்.

கடந்த 2014 ஆம் ஆண்டு எதிர்கட்சித்தலைவராக இருந்த போது அப்போதய ஆளுநர் ரோசய்யாவை சந்திக்க ராஜ்பவன் சென்ற விஜயகாந்த், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தார்.

மின்சாரம், விவசாயம், நெசவாளர் பிரச்னைகள் குறித்து ஆளுநரிடம் பேசினார் விஜயகாந்த். 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது ராஜ்பவன் சென்றுள்ளார் விஜயகாந்த்.

English summary
DMDK general secretary Vijakanth on saturday met Governor Banwarilal Purohit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X