டெங்கு, பன்றிக்காய்ச்சல், சிக்குன்குனியா, டைபாய்ட் பரவுது... பத்திரம் மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மழைக்காலம் என்பதால் டெங்கு, வைரஸ் காய்ச்சல், மர்மகாய்ச்சல், சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் என பலவித காய்ச்சல்கள் பரவி வருகின்றன.

காய்ச்சல் வந்தாலே உடல் சோர்வடைந்து, உடம்பு நெருப்பாய் கொதிக்கும், எதுவும் சாப்பிடப்பிடிக்காது, பசியின்மை, அடித்துப் போட்டதுபோல் உடம்பு வலி ஏற்படும். காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன. இது சாதாரண காய்ச்சலாக இருந்தால் சில ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும்.

உடலில் கிருமி தொற்று ஏற்படும்போது, அதை எதிர்த்து போராடும் உடல் எதிர்ப்பு சக்தியின் போராட்டமே காய்ச்சல் எனப்படும். இந்த போராட்டத்தின் தன்மையைப் பொறுத்து உடலின் வெப்பம் அதிகரிக்கும். எனவே காய்ச்சல் வந்தாலே அஞ்ச வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வைரஸ் காய்ச்சல்

வைரஸ் காய்ச்சல்

பெரும்பாலான வைரஸ் காய்ச்சல், அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும். பொதுவான வைரஸ் காய்ச்சலானது, ஒரு வாரம் வரை நீடிக்கலாம். பொதுவாக இந்த வகையான காய்ச்சல் தொண்டையில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். இதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்திவிடலாம்.

டைபாய்ட் காய்ச்சல்

டைபாய்ட் காய்ச்சல்

டைபாய்டு காய்ச்சல்' (Typhoid Fever) பொதுமக்கள் மத்தியில் பிரபலம். டைபாய்டு காய்ச்சலுக்குக் `குடற்காய்ச்சல்' (Enteric Fever) என்று வேறு ஒரு பெயரும் உண்டு. காரணம், இந்த நோயை உண்டாக்கும் பாக்டீரியா கிருமிகள் சிறுகுடலில் வசித்து, அங்கேயே வளர்ந்து, காய்ச்சலை உண்டாக்குவதுதான்.

குழந்தை முதல் முதியோர் வரை எல்லா வயதினரையும் இது பாதிக்கலாம்.

டைபாய்ட் அறிகுறிகள்

டைபாய்ட் அறிகுறிகள்

மனித உடலுக்குள் இந்த நோய்க்கிருமி நுழைந்து, பத்திலிருந்து பதினான்கு நாட்கள் கழித்து டைபாய்டு அறிகுறிகள் துவங்கும். முதல் நாளில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சோர்வு தோன்றும். அடுத்த நான்கு நாட்களில் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். இரவில் காய்ச்சல் அதிகமாகும். 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக காய்ச்சல் எகிறும்.

உடம்பில் செந்நிற புள்ளிகள்

உடம்பில் செந்நிற புள்ளிகள்

ஒவ்வொரு நாளும் தலைவலி அதிகரிக்கும். உடல்வலி கடுமையாகும். பசி குறையும். வாந்தி வரும். வயிறு வலிக்கும். ஏழாம் நாளில் நாக்கில் வெண்படலம் தோன்றும். வயிற்றுப்போக்கு தொல்லை தரும். சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். உடலெங்கும் பரவலாக ரோஜா நிறப் புள்ளிகள் தோன்றும். இந்தப் புள்ளிகள் மார்பிலும் முதுகிலும் அதிக அளவில் காணப்படும்.

அதிகரிக்கும் நச்சுத்தன்மை

அதிகரிக்கும் நச்சுத்தன்மை

இந்தக் காய்ச்சலுக்குத் தொடக்கத்திலேயே சிகிச்சை பெறத் தவறினால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறைந்து, மயக்கம் வரலாம். சுயநினைவை இழக்கலாம். சிலருக்கு நோய் தொடங்கிய மூன்றாம் வாரத்தில் சிறுகுடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மலத்தில் ரத்தம் வெளியேறலாம். ரத்தத்தில் இந்த நோய்க்கிருமிகளில் நச்சுத்தன்மை அதிகரித்து, செப்டிசீமியா எனும் நிலைக்கு மாறி, நோயாளிக்கு அதிர்ச்சி நிலை உருவாகி, உயிருக்கே ஆபத்து வரலாம்.

மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்

மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்

டைபாய்டு காய்ச்சலுக்கு மருத்துவர் கூறும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். டைபாய்டு காய்ச்சல் வந்தவர் வெளியிலும் வெயிலிலும் செல்லாமல் இருக்க வேண்டும். அதிகம் சோர்வடைந்தால் நோயளியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையைத் தொடர வேண்டும், நோயாளி முதியவர் அல்லது கர்ப்பிணி என்றால் சிறப்பு கவனம் தேவை.

கொசுக்கடியினால் மலேரியா

கொசுக்கடியினால் மலேரியா

மலேரியாவும் கொசுக்கடியால் ஏற்படும் ஒரு வகையான காய்ச்சல் ஆகும். இது வந்தால், உடல் நடுக்கத்துடன் காய்ச்சல் இருக்கும். இதன் தீவிரம் அதிகம் இருந்தால், மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். உடனடி சிகிச்சை அவசியம்

உயிர் கொல்லி டெங்கு

உயிர் கொல்லி டெங்கு

டெங்கு எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சல். ஏடிஸ் எனும் கொசுவின் மூலம் மட்டுமே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் கிருமி பரவுகிறது. கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, வயிற்றுவலி தொடர்ச்சியான வாந்தி, உடல்சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு உடலில் அரிப்பு, சிவப்புப் புள்ளிகள் தோன்றும். இந்த காய்ச்சலின் தீவிர நிலையில், உடலின் உட்பகுதியில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். ரத்த தட்டையணுக்கள் குறைந்து உயிரிக்கு ஆபத்தாகிவிடும்.

இன்புளுயன்சா வகை வைரஸ்

இன்புளுயன்சா வகை வைரஸ்

எச் 1 என் 1 என்னும் ஒரு வகையான இன்புளுயன்சா வகை வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. வைரஸ் தாக்கத்தினால் ஏற்படுவதே. 2010-ம் ஆண்டில் இந்த நோய் தாக்கத்தினால், பலர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது இந்த நோய்க்கானகாய்ச்சல் மருந்தான டாமிப்ளூ (Tamiflu) கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உடலைத் தாக்கினால், அதிகப்படியான காய்ச்சல், தொண்டையில் நோய்த்தொற்று மற்றும் கல்லீரலில் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்தும்.

மூட்டுக்களை முடக்கும் சிக்குன் குனியா

மூட்டுக்களை முடக்கும் சிக்குன் குனியா

சிக்கன் குன்யா என்பது மலேரியா மற்றும் டெங்குவை விட சற்று வீரியம் குறைந்ததுதான். ஆனால் இந்த காய்ச்சல் வந்தால், கடுமையான உடல் வலியுடன் மூட்டு வலியும் அதிகமாக இருக்கும். கொசுக்களின் மூலம் வைரஸானது உடலைத் தாக்கும். உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

எந்த காய்ச்சல் வந்தாலும் எதிர்த்து போராடும் தைரியம் வேண்டும். சத்தான, சுகாதாரமான உணவுகளை சாப்பிடுவதோடு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நோய் தடுப்பு முறைகளை கையாண்டால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
what you need to know about the differences in the symptoms of chikungunya, dengue and malaria and how to prevent getting infected.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற