For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பிளஸ் புதுமுகங்கள்...அதிமுகவின் விருதுநகர் மாவட்ட வேட்பாளர்களின் பயோடேட்டா

By Karthikeyan
Google Oneindia Tamil News

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட அதிமுக வேட்பாளர்களாக சிட்டிங் எம்.எல்.ஏக்களான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆகியோரும் புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்பு:

கே.டி.ராஜேந்திர பாலாஜி:

சிவகாசி சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜிகே.டி.ராஜேந்திர பாலாஜி (47) 1986 ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருந்து வருகிறார். விஸ்வகர்மா (ஆசாரி) சமூகத்தைச் சேர்ந்தவர். அருப்புக்கோட்டையை அடுத்த குருந்தமடம்தான் இவர் சொந்த ஊர். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இன்னும் திருமணமாகவில்லை.

2000ம் ஆண்டு முதல் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்துள்ளார். தற்போது விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். 2011-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சிவகாசி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு செய்தி, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கங்கள் துறை அமைச்சரானார். 3 முறை திருத்தங்கல் நகராட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர் ராஜேந்திர பாலாஜி.

வைகை செல்வன்:

அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ளார் வைகை செல்வன்வைகை செல்வன் (49). மதுரை மாவட்டம் பேரையூர் சிலைமலைப்பட்டியைச் சேர்ந்தவர். எம்.ஏ., பிஎல்., பி.எச்.டி., படித்துள்ள இவர், அரசு தலைமை கொறடா, அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளராக பதவி வகித்தவர். 2011 ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பள்ளி கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் வைகை செல்வன். இம்முறையும் அருப்புக்கோட்டை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

கி.கலாநிதி:

விருதுநகர் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கி.கலாநிதி கலாநிதி (64) கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். விருதுநகர் முத்துராமன்பட்டியில் வசித்து வருகிறார். விருதுநகர் சட்டசபை தொகுதிச் செயலாளர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் கலாநிதி.

சந்திரபிரபா:

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரபிரபா சந்திரபிரபா அதிமுக மாவட்ட கவுன்சிலரான முத்தையாவின் மனைவி. தாழ்த்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்தவரான இவர் பண்டிதன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தமிழில் ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார். விருதுநகர் அதிமுக மாவட்ட இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் பதவி வகித்தவர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் கூட்டுறவு வங்கியின் இயக்குநர் பொறுப்பிலும் உள்ளார் சந்திரபிரபா.

ஏ.ஏ.எஸ். ஷியாம்:

ராஜபாளையம் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.ஏ.எஸ். ஷியாம் ஷியாம் (46) பிஎஸ்சி பட்டம் பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளராக பதவி வகித்தவர். இவரது தந்தை காங்கிரஸ் பிரமுகர், ராஜபாளையம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு வகித்தவர்.

எஸ்.ஜி.சுப்பிரமணியன்:

சாத்தூர் தொகுதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள எஸ்.ஜி.சுப்பிரமணியன் சுப்பிரமணியன் (53) தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர். 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக பதவி வகித்தவர். தற்போது கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார் எஸ்.ஜி.சுப்பிரமணியன்.

க. தினேஷ்பாபு:

திருச்சுழி தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தினேஷ்பாபுதினேஷ்பாபுவின் சொந்த ஊர் நரிக்குடி அருகே முக்குளம். தற்போது அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் சாலையில் வசித்து வருகிறார். வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வருகிறார். விருதுநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார் தினேஷ்பாபு.

English summary
Here the Bio datas of Dindigul Dist. AIADMK candidates:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X