சசிகலாவின் பவர் மையம் விவேக்கிடம் ஆறுமுகசாமி கமிஷன் 3 மணி நேர விசாரணை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  விவேக்கிடம் ஆறுமுகசாமி கமிஷன் 3 மணி நேர விசாரணை!- வீடியோ

  சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமகிடம் 3 மணி நேரம் விசாரணை முடிந்தது. மீண்டும் பிப்ரவரி 28ம் தேதி கமிஷனில் ஆஜராக உள்ளதாக விவேக் கூறியுள்ளார்.

  தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி நள்ளிரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வந்த நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்கு அச்சாரமாக ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது.

  Vivek Jayaraman appears before justice Arumugasamy commission

  சென்னை எழிலகத்தில் கலசமஹாலில் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை அப்பலோ மருத்துவமனை, ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், கைரேகை பதிவு பெற்ற டாக்டர் பாலாஜி, எம்பார்மிங் செய்த டாக்டர் சுதாசேஷையன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

  சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா ஏற்கனவே ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில், இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஓவுவமாக விவேக் ஜெயராமனை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி கடந்த வாரத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

  இந்நிலையில் நோட்டீஸை ஏற்று விவேக் ஜெயராமன் இன்று விசாரணைக்கு ஆஜரானார். காலை 10 மணி முதல் சுமார் 3 மணி நேரமாக விவேக்கிடம் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து வெளியே வந்த விவேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது : விசாரணைக் கமிஷன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். சட்டப்படி அங்கு கூறிய விவரங்களை தெரிவிப்பது தவறு.மீண்டும் பிப்ரவரி 28ம் தேதி ஆஜராக சொல்லி இருக்கிறார்கள் அப்போது ஆராவேன் என்றார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Ilavarasi's son Vivek Jayaraman appeared before Justice Arumugasamy commission which is hearing the death probe of former CM Jayalalitha.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற