For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதான் கீதாவின் கதை!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: 8 வயதில் வழிதவறி பாகிஸ்தானுக்கு சென்ற கீதா 15 ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த கீதா அவருக்கு 8 வயது இருக்கையில் வழிதவறி பாகிஸ்தானுக்கு சென்றார். லாகூர் சென்ற அவர் எதி பவுன்டேஷனைச் சேர்ந்த பில்கிஸ் எதியால் இத்தனை ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் 15 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பியுள்ளார்.

கீதா

கீதா

வாய் பேச முடியாத, காது கேட்காத அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த பில்கிஸ் எதி அவருக்கு கீதா என்று பெயர் வைத்தார்.

விநாயகர்

விநாயகர்

கீதா பாகிஸ்தானில் தான் தங்கியிருந்த அறையில் இந்து கடவுள்களின் புகைப்படங்கள், சிறிய மேஜையில் காத்மாண்டுவில் இருந்து வரவழைக்கப்பட்ட விநாயகர் சிலை ஆகியவற்றை வைத்து வணங்கியுள்ளார்.

தொழுகை

தொழுகை

கீதா நமாஸ் செய்ததுடன், புனித ரமலான் மாதத்தில் நோன்பும் வைத்துள்ளார். அவரை யாரும் இஸ்லாத்திற்கு மாற்ற முயற்சிக்கவில்லை என்று எதி தெரிவித்துள்ளார்.

சைவம்

சைவம்

கீதா சைவப் பிரியை. வாய் பேச முடியாவிட்டாலும் அவர் தான் கூற விரும்புவதை இந்தியில் எழுதி காண்பித்து வந்துள்ளார்.

தெலுங்கானா

தெலுங்கானா

கீதாவின் இந்தியா முகவரியை கேட்டபோது அவர் திரும்பத் திரும்ப 193 என்ற எண்ணை எழுதியுள்ளார். இந்திய வரைபடத்தில் தெலுங்கானா மற்றும் ஜார்க்கண்டை காண்பித்து தனது பெற்றோர் அங்கிருப்பதாக கூறியுள்ளார். பின்னர் தான் பீகாரை காண்பித்துள்ளார். இந்தியாவில் தனக்கு 7 சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

English summary
Differently abled Geeta has returned to India after 15 years stay in Pakistan. She is yet to get re-united with her family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X