For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினிகாந்த் வெப்சைட்டில் தாமரை சின்னம் திடீரென மாயமானது ஏன்? பாம்பு உருவம் ஏன்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினிகாந்த் வெப்சைட்டில் தாமரை சின்னம் திடீரென மாயமானது ஏன்? பாம்பு உருவம் ஏன்?- வீடியோ

    சென்னை: ரஜினிகாந்த் கட்சியின் சின்னம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அவரது வெப்சைட்டில் இடம் பெற்ற பாபா முத்திரை பேசு பொருளானது.

    பாம்பு உருவம் பொறித்த பாபா முத்திரை லட்சிணை அது. இமயமலையில் இன்னும் வாழ்வதாக நம்பப்படும் பாபாஜியின் அபான முத்திரை அது என்பது ரஜினிகாந்த் மற்றும் அவரது ரசிகர்கள் நம்பிக்கை.

    இதையே தனது கட்சி சின்னமாக பயன்பபடுத்த ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    யோக முத்திரை

    யோக முத்திரை

    இந்த முத்திரையை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், உடல், உயிர், அறிவு மூன்றிலும் சிலிர்ப்பு ஏற்பட்டு பலன் கிடைக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. ஆன்ம்ீக அரசியலை மேற்கொள்ளப்போவதாக கூறிய ரஜினிக்கு இந்த பாபா முத்திரை கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

    நீல வண்ணம்

    நீல வண்ணம்

    இந்த நிலையில், பாபா முத்திரையில் இருந்து தாமரை சின்னம் அகற்றப்பட்டது. பாபா முத்திரை வட்டத்தின் பின்னணியில் இருந்த கருப்பு வண்ணத்திற்கு பதில் நீல வண்ணம் மாற்றப்பட்டுள்ளது.

    பாஜக சின்னம் என்பதால்

    பாஜக சின்னம் என்பதால்

    தாமரை என்பது இப்போது பாஜக சின்னமாக உள்ளதால், அது பாஜகதான் ரஜினிகாந்த் கட்சி துவங்க காரணமாக இருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கியதாக அவரது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் புகார் கூறியதால், தாமரை படத்தை அவர் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    பாம்பு பின்னணி

    பாம்பு பின்னணி

    கொல்கத்தாவிலுள்ள பேலூர் மடத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராமகிருஷ்ணா மடம் தனக்கென்று ஒரு சின்னம் வைத்துள்ளது. சூரியன் உதிக்கும் பின்னணியில் உள்ள தடாகத்தில் தாமரையும், வாத்தும் உள்ளது. சின்னத்தை சுற்றி பாம்பு உள்ளது. பாபா முத்திரை சின்னத்தை சுற்றிலும் கூட பாம்பு உள்ளது. இந்து மத நம்பிக்கைப்படி பாம்பு என்பது உயிர் சக்தியாகும். வளத்தை குறிப்பதாகும். பாம்பு தீண்டுவதாக கனவு கண்டால் செல்வப்பெருக்கும், நல்லதும் நடக்கும் என்றே கனவு சாஸ்திரம் கூறுகிறது.

    English summary
    With the expectation of what Rajinikanth party's symbol will be, the Baba symbol become talking point. The Ramakrishna Math, which is headquartered at Belur Math in Kolkata, has a logo for itmself which is similar to Rajini website symbol.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X