பிக்பாசில் பரபரப்பு.. ஜல்லிக்கட்டு போராட்டம் ஏன்? ஜூலியை மிரட்டிய குண்டு ஆர்த்தி, காயத்ரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷம் போட்டது ஏன் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியிடம், நடிகை ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் மல்லுக்கட்டியது பரபரப்பை உண்டாக்கியது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் ஜூலி. போராட்டத்தின் போது இவர் வெளிப்படுத்திய கோஷங்கள் போராட்டம் களம் தாண்டி மற்றவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த பிரபலத்தை வைத்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் ஜூலி.

Why you join protested in Jallikattu? Gayatri Raguram and Aarthi asks Juliana.

நேற்று 3வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் பாத்திரம் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்தல், சமையல் செய்வதற்கான குழுக்கள் பிரிக்கப்பட்டது. இவர்களுக்கான நிபந்தனைகளை குழுத் தலைவர் சினேகன் வாசித்து காட்டினார்.

பின்னர், வேலைகளின் இடையே, காயத்ரி ரகுராம், ஆர்த்தி, ஜூலி ஆகியோர் ஜல்லிக்கட்டு விவகாரம் பற்றி தங்களுக்குள் விவாதம் செய்தனர். அப்போது கடந்த சில மாதங்களுக்கு முன் மெரீனாவில் நடந்த போராட்டத்தின் போது போலீஸ் தடியடி நடத்தியதற்கு காரணமே இவங்கதான் என்று ஜூலியை ஆர்த்தியும், காயத்ரியும் கைகாட்டுகின்றனர்.

அப்போது ஜூலியோ தான் திட்டியது மூன்று தலைவர்களைதான் என்றார். அதற்கு ஆர்த்தி தனிப்பட்ட நபர்கள் மீது பெயரை குறிப்பிட்டது ஏன் என கேட்டார். அதற்கு அந்த பெண்ணோ, அவர்கள் தான் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என பதில் அளித்தார். இப்படியே போன பேச்சில், ஜல்லிக்கட்டுக்கான போராளி என்றால் ஜல்லிக்கட்டுக்காக மட்டும்தான் போராட வேண்டும் என்று காயத்ரி கண்டிப்புடன் கூறினார்.

உடனே ஆர்த்தி ஏன் விவசாயிகளுக்காக போராட வில்லையே என்றார். அதற்கு ஜூலி, தமது வீட்டில் 10 மாடுகள் வளர்த்து வந்ததாகவும் தற்போது ஒரே ஒரு மாடுதான் உள்ளது. பராமரிக்க ஆள் இல்லை எனக் கூறி முடிப்பதற்குள் முந்திக்கொண்ட ஆர்த்தி விவசாயிகள் போராட்டத்தின்போது ஏன் டைம் இல்லையா என்று நக்கலாக கேட்டார். ஜூலியிடம், அப்போ நீங்க போராளினு கூறவே கூடாது என்றார் காயத்ரி. அதற்கு அவரு்ம் நான் அப்படி கூறிகொள்வதே இல்லையே என்றார்.

மேலும் பிக் பாசில் பிரச்சினை வந்தால் எதிர்த்து குரல் கொடுப்பீர்களா என ஆர்த்தி ஜூலியிடம் கேட்க இந்த வாக்குவாதம் அப்படியே சில நிமிடங்கள் நீண்டது. காயத்ரி ரகுராம், பாஜகவைச் சேர்ந்தவர். ஆர்த்தி அதிமுகவில் இருந்தவர். இருவரும் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bigg boss: Why you join protested in Jallikattu? Gayatri Raguram and Aarthi asks Juliana.
Please Wait while comments are loading...