காரைக்குடி பள்ளியில் சர்வதேச மகளிர் தினம், காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை; காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், காரைக்குடி பெர்ல் சங்கமம் இன்டராக்ட் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா இன்று (08.03.2018) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி. அழகுசுந்தரி அவர்கள் தலைமையேற்றார்.

காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீ ராஜா ராஜன் கல்லூரியின் முதல்வர் திருமதி. ஸ்ரீதேவி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பட்டதாரி ஆசிரியர் திருமதி. சித்ரா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

மாணவிகள் நடிப்பு

மாணவிகள் நடிப்பு

மாணவர்கள், இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரகாந்தியாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவாக, விமானப் பணிப்பெண்ணாக, பள்ளித் தாளாளராக, தேவதையாக, ஜான்சி ராணியாக, வேலு நச்சியாராக வேடம் பூண்டு அவர்களின்
சாதனைகளையும், வீர தீர செயல்களையும் நடித்துக் காண்பித்தனர்.

கவிதை, பேச்சுப்போட்டி

கவிதை, பேச்சுப்போட்டி

பாரதியாரின், பெண் பற்றிய கவிதையையும், அம்மாவின் அன்பை பற்றி கவிதை பாடியும், மகளிரின் பெருமையை போற்றும் பொன் மொழிகளை வாசித்தும் மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினர். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் உதவி பேராசிரியர் முனைவர் மு.சு. கண்மணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சாதனை மாணவிகள்

சாதனை மாணவிகள்

பெண்களுக்கு சம உரிமை கிடைத்ததா, கிடைக்கவில்லையா என்ற தலைப்பில் எட்டாம் வகுப்பு மாணவிகள் கோமதி மற்றும் தீபிகா விவாதம் நடத்தினர். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கேள்விக்கு என்ன பதில் என்ற தலைப்பில் மகளிரின் சாதனைகளை பட்டியலிட்டனர்.

மாணவிகளுக்கு பரிசு

மாணவிகளுக்கு பரிசு

இவ்விழாவில், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள் கோமதிஜெயம் மற்றும் மீனாட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியின் முடிவில் இன்டராக்ட் சங்கத் தலைவர் செல்வன். ஆரோக்கிய கிரிஸ்டோபர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் முத்துவேல்ராஜன் விஜயகாந்தி அவர்கள் மற்றும் ஜான்பிரிட்டோ செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
International Women's Day is celebrated on March 8 at Ramanathan school in Karaikudi. every year to celebrate the womanhood and is a time to reflect courage and determination by ordinary women.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற