எந்த மாதிரியான நாட்டில் நாம் வசிக்கிறோம் - சிறுமி கொலைக்கு கொந்தளிக்கும் வரலட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆசிஃபா கொலைக்கு கொந்தளிக்கும் வரலட்சுமி

  சென்னை: என்ன மாதிரியான நாட்டில் வாழ்கிறோம் வெட்கமாக இருக்கிறது என்று காஷ்மீர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளார்

  ஜம்மு- காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு பலரும் நீதி கேட்டு போராடி வருகின்றனர். சமூகவலைத்தளங்களில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

  Wow what a country we live in says Varalakshmi

  குற்றவாளியை காப்பாற்ற பலரும் துடிக்கின்றனர். இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை சிதைத்த அந்த கொடூரனின் புகைப்படத்தை பதிவிட்டு பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

  நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்துள்ளார். ஒரு அப்பாவி ஆத்மாவை சிதைத்து படுகொலை செய்திருக்கிறார்கள். வெட்கமாக இருக்கிறது. குற்றவாளியை பாதுகாக்கின்றனர் அவனை காக்க போராடுகின்றனர். இந்த மனிதனை காக்க சட்டமா? அடடா... என்ன மாதிரியான நாட்டில் நாம் வாழ்கிறோம்!!! என்று பதிவிட்டுள்ளார்.

  பெண் வலைப்பதிவாளர் தனது ட்விட்டர் பதிவில், இந்த சைத்தான் முகங்களைப் பாருங்கள். சிறுமியை சிதைத்து கொன்றவன் ஒருவன். மற்றொருவன் சஞ்சிராம் இவன் கோவில் நிர்வாகி. சிறுமியை பலாத்காரம் செய்ய உதவியாக இருந்தவன். பல நாட்களாக திட்டமிட்டே சிறுமியை சிதைத்துள்ளனர். இவர்களுக்கு வக்கீல்களும், இந்து அமைப்பனிஐம் ஆதரவாக போராடி வருகின்றனர் என்று பதிவிட்டுள்ளார். சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நீதி வேண்டும் என்று கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Actress Varalakshmi Sarathkumar has posted her twitter page, The first of the monsters that raped and killed that innocent soul burninhell shame him and he is supposed to protect us. A man of the law..!!! Wow watte country we live in.!!!.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற