அப்பா முகத்தில் கேக் ஃபேஷியல்.. ஆச்சரியத்துடன் பார்த்த ஜிவா டோணி.. வைரலாகும் படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அப்பாவை ஆச்சரியமாகப் பார்க்கும் ஜிவா டோணியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் இந்திய அணி வீரரும், முன்னாள் கேப்டனுமான டோணி நேற்று தனது 36வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதனை முன்னிட்டு மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய அணி, டோணியின் பிறந்த நாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடியது. பிறந்தநாளை முன்னிட்டு டோணி கேக் வெட்டிய போது, அருகில் இருந்த அவரது செல்ல மகள் ஜிவா மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி ரசித்து மகிழ்ந்துள்ளனர்.

Ziva enjoys Dhoni's birthday celebrations

அப்பா முகத்தில் கேக் பூசப்பட்டிருப்பதை ஆச்சரியத்துடன் ஜிவா பார்க்கும் புகைப்படத்தை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். க்யூட்டாக இருக்கும் குட்டி தேவதை ஜிவா, டோணியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தனது செல்ல மகள் அருகில் இருந்து ரசிக்கும் அழகிய தருணமே டோணிக்கு சிறப்பான பிறந்தநாள் பரிசாக இருந்திருக்கும் நிலையில், ரசிகர்களுக்கும் இந்த புகைப்படம் மனமகிழ்ச்சியை அளித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sakshi Dhoni's instagram photo of Jiva amused to see her daddy with cake smeared in his face
Please Wait while comments are loading...