பேசிட்டே இருந்தா என்ன அர்த்தம்! யார் பெருசுனு போட்டு காட்டுங்க! தேனியில் கலக்கிய ’மைக்செட்’ திருவிழா
தேனி : தேனி மாவட்டத்தில் மாட்டுவண்டி பந்தயம், புறா பந்தயம் போல நடத்தப்பட்ட மைக் செட் பந்தயத்தில் திண்டுக்கல் தேனி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மைக் செட் உரிமையாளர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுச் சென்றனர்.
Recommended Video
திருவிழா காலங்களில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு போட்டிகள் நடத்தப்படும் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி என்றால் வடமாவட்டங்களில் கபடி போட்டி உள்ளிட்டவை நடத்தப்படும்.
மேலும் மாட்டு வண்டி பந்தயம், கிடா முட்டு சண்டை சேவல் சண்டை, புறா ரேஸ் உள்ளிட்ட போட்டிகளை திருவிழாக்களில் நடத்தி அதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்படுவது வழக்கம்.

மைக் செட் பந்தயம்
ஆனால் மைக் செட் பந்தயத்தை இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். ஆனால் அப்படி ஒரு பந்தயம் நடந்திருக்கிறது வேறு எங்கும் இல்லை நம்ம ஊர் தேனியில் தான். இந்த இசை திருவிழாவில் தேனி திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மைக் செட் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் இசை திறமையை வெளிக்காட்டினர்.

மைக் செட் தொழிலாளர்களுக்கு
வீட்டு விசேஷங்கள் தொடங்கி திருவிழாக்கள் அரசியலுக்கு கட்சி கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மைக் செட் அமைத்து வந்தாலும் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கு என நல வாரியங்கள் எதுவும் இல்லை. பெரும்பாலும் இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் நலிவடைந்த நிலையில் உள்ளனர். அவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நலிவடைந்து வரும் மைக் செட் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையிலும் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

ஒலிபெருக்கி உரிமையாளர்கள் சங்கம்
கம்பம் நகர ஒலிபெருக்கி உரிமையாளர்கள் சங்கம் நடைபெற்ற இந்த போட்டியில் கலந்துகொண்ட மைக் செட் உரிமையாளர்கள் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை திறந்தவெளியில் அமைத்து விதவிதமான பாடல்களை ஒளிபரப்பி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் எந்த மைக் செட்டில் இருந்து அதிக தூரத்திற்கு தெளிவான பாடல் கேட்கிறது என்பதை வைத்து வெற்றியாளரை தீர்மானம் செய்யப்பட்டனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று மைக் செட் உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கோரிக்கை
போட்டியில் கலந்து கொண்ட உரிமையாளர்கள் கூறுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த மைக் செட் போட்டி நடைபெறுவதற்கு அரசு முழுமையான அனுமதியை வழங்க வேண்டும், கொரோனா காலம் மட்டுமின்றி, கடந்த ஆண்டுகளில் திருவிழாக்கள் நடைபெறாமல் வேலையின்மை ஏற்பட்டு போதிய வருமானம் இல்லாமல் மிகவும் சிரமமடைந்து வருவதாக வருத்தம் தெரிவித்து, வேலையின்மை காலங்களில் அரசு கடன் உதவி அல்லது மானிய உதவிகளை வழங்க வேண்டும் என்று கூறி கோரிக்கை வைத்தனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications