வைகை அணைக்கு சென்ற அமைச்சர்கள்.. பறந்து வந்த தேனீக்களால் தேனியில் ஒரே பரபரப்பு
தேனி : தேனி மாவட்டம் வைகை அணையில் இன்று விவசாயிகளின் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள் அதிகாரிகள் கூட்டத்திற்குள் புகுந்த தேனீக்கள் அதிகாரிகளை சரமாரியாக கொட்டியது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
தேனி , மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், மாவட்டங்களில் 1லட்சத்தி 60 ஆயிரம் ஏக்கர் விவசாயிகன் பயன்பெரும் வகையில் தமிழக முதல்வர் உத்தரவையடுத்து மூன்றாவது முறையாக வைகை அணையை இன்று திறக்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டார்.
வைகை அணையில் தண்ணீர் திறப்பதற்கு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுபணித்துறை அலுவலர்கள் அணையின் மேற்பகுதியில் குவிந்து இருந்தனர்.

அமைச்சர்கள் கூட்டத்தில்
அப்போது அணைப்பகுதியின் அடி சுவரில் இருந்த தேனீக்கள் எதிர்பாராத விதமாக களைந்து வந்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அலுவலர்கள் கூட்டத்தில் புகுந்து கொட்டியது .

அதிகாரிகள் காயம்
இதனையடுத்து தேனீக்களின் தாக்குதலுக்கு உள்ளான 7 க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தேனீக்களுக்கு பிடிக்காது
தேனீக்களிடம் கொட்டு வாங்கி சிகிச்சை பெற்ற பொதுபணித்துறை அலுவலர் சுகுமார் தாங்கள் வாசனை திரவியங்களை உபயோகித்ததாலும் தேனீக்களுக்கு வாசனை திரவியங்கள் பிடிக்காது எனவும் இதனால் தேனிக்கள் தங்களை கொட்டியதாகவும் தெரிவித்தார்.

தேனியில் பரபரப்பு
இதனையடுத்து பொதுப்பணித்துறையினரால் அணையின் அடிப்பகுதியில் உள்ள தேனீக்கள் அப்புறபடுத்தப்பட்டது. அமைச்சர் கூட்டத்தில் புகுந்த தேனீக்களால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications