வைகை அணையில் 4,000 கனஅடி தண்ணீர் திறப்பு.. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தேனி: வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, 71 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தேக்கப்படும் நீரானது, தேனி திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணையின் முழு கொள்ளவான 71 கனஅடியில் 70 கனஅடி நிரம்பியுள்ளது. நேற்று வரை வைகை அணைக்கு சுமார் 3,127 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதில் சுமார் 2,069 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. மதுரை, இராமநாதபுரம், மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிக்கு வைகை அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும். தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகமானதால், வைகை அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.
இதன் காரணமாக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டுவந்த 2 ஆயிரம் கன அடி நீரானது காலை 11 மணி முதல் 400 கன அடியாக உயர்த்தி திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் ஆற்றுபகுதி அமைந்துள்ள தேனி, திண்டுக்கல் , மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வைகை ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பு பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications