கோழிக்கூண்டில் அம்சக்கொடி.. தேனி தோட்டத்தில் ஏடாகூடமாக சிக்கிய கணவர்.. இப்ப நிலைமை பாத்தீங்களா?
தேனி: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே, தாலி கட்டிய மனைவியை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி வைத்த கணவர், 5 நாட்களுக்கு பிறகு புதைக்க முயன்றபோது போலீசில் பிடிபட்டார். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தையே உலுக்கி எடுத்த நிலையில், தற்போது இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு நீதிமன்றம் தந்துள்ளது.. பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. யாரிந்த தேனி கணேசன்? அம்சக்கொடி தெரியுமா?
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே, கடந்த 2022-ல் நடந்த சம்பவம் இதுவாகும்.. அங்குள்ள தனிப்பாறை என்ற பகுதியை சேர்ந்த விவசாயி பெயர் கணேசன்.. 58 வயதாகிறது.. மனைவி பெயர் அம்சக்கொடி 51 வயதாகிறது..

இந்த தம்பதியின் மகள் மணிமாறன், பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. எனவே, கணேசனும், அம்சக்கொடியும் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டிலேயே வசித்து வந்தனர்.
கணேசனுக்கு மதுப்பழக்கம் தீவிரமாக இருந்துள்ளது.. இதனால் தினமும் குடித்துவிட்டு, அம்சக்கொடியை டார்ச்சர் செய்து, தகராறு செய்வதையே வழக்கமாக வைத்திருந்தார்..
மதுபோதை கணேசன்
இந்நிலையில் சம்பவத்தன்றும், கணேசன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அம்சக்கொடி தட்டிக்கேட்கவும், தம்பதிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கணேசன், விறகு கட்டையால் அம்சக்கொடியை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.. இதில் பலத்த காயமடைந்த அம்சக்கொடி , ரத்த வெள்ளத்திலேயே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பிறகு கணேசன், மனைவியின் சடலத்தை, சாக்கு மூட்டையில் கட்டி வீட்டிற்குள் வைத்து கதவையும் பூட்டிவிட்டார்... பிறகு எதுவுமே நடக்காததுபோல, அடுத்த 5 நாட்களும், தோட்ட வேலைகளை கேஷூவலாக பார்த்து வந்திருக்கிறார்..
அம்சக்கொடி கொடுமை
இதற்கு நடுவில், உறவினர்களுக்கு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, தன்னுடன் அம்சக்கொடி சண்டை போட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார் என்றும் சொல்லி நம்பவைத்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், தோட்டத்து வீட்டிற்குள்ளிருந்து துர்நாற்றம் வெளிவர ஆரம்பித்துள்ளது.. உடனே சுதாரித்து கொண்ட கணேசன், சடலத்தை தன்னுடைய தோட்டத்திலேயே யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட முடிவு செய்தார்.
இதற்காக சாக்கு மூட்டையை பிரித்து அம்சவள்ளியின் சடலத்தை, கயிற்றை கட்டி வீட்டின் வாசல்வரை இழுத்து வந்தார்.,.. பிறகு கோழிகளை அடைத்து வைக்கும் கூண்டிற்குள் அம்சக்கொடியின் உடலை மூடி வைத்து விட்டு, தோட்டத்தில் பள்ளம் தோண்டும் வேலையில் அவசர அவசரமாக இறங்கினார்..
கோழிக்கூண்டு
வீட்டிற்குள் மூட்டையில் இருந்த சடலம், வெளியே வந்துவிட்டதால், துர்நாற்றம் நாலாபக்கமும் வீச துவங்கியது.. அத்துடன், கணேசனின் பரபரப்பான நடவடிக்கைகள், பக்கத்து தோட்டத்தில் இருந்த அம்சக்கொடியின் உறவினர்களுக்கு பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
எனவே, கணேசன் தோட்டத்திலுள்ள கோழிக்கூண்டை திறந்து பார்த்தனர். அப்போதுதான் அழுகிய நிலையில் அம்சக்கொடியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகுதான், மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, கணேசனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
நீதிபதி அதிரடி தீர்ப்பு
இறுதியில், மனைவியை விறகு கட்டையால் அடித்துக் கொன்றதை கணேசன் வாக்குமூலமாக கூறினார்.. இதையடுத்து, கணேசன் சிறையில் அடைக்கப்பட்டார்..
இந்த வழக்கின் விசாரணை தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி அனுராதா முன்னிலையில் நடந்து வந்த நிலையில், வழக்கின் விசாரணை தற்போது முடிந்துள்ளது.. நீதிபதியும் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார்.. மனைவியை கொன்ற வழக்கில் 3 வருடம் கழித்து, கணேசனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, தேனி மக்களின் கவனத்தை பெற்றுவருகிறது.


Click it and Unblock the Notifications
