பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள்.. கண்மூடி திறப்பதற்குள் நடந்த கொடூரம்! கேரள இளைஞர் கைது
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பஸ்சுக்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் 3 பேர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஜித் குமார் என்ற கேரளாவை சேர்ந்த இளைஞர் தாறுமாறாக ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி விட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே க. விலக்கு பேருந்து நிலையத்தில் நேற்று பயணிகள் சில பஸ்சிற்காக காத்து நின்றனர். அப்போது கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த அஜித் குமார் என்ற 28 வயது வாலிபர், காரில் தேனியில் இருந்து வந்துகொண்டிருந்தார்.

இடித்து தள்ளிய கார்
அப்போது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் செண்டர்மீடியனை இடித்து தள்ளியபடி சீறிப்பாய்ந்து வந்தது. இறுதியில் க.விலக்கு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீதும் மோதி இடித்து தள்ளியபடி சென்றது. இந்த விபத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற 4 பயணிகள் படுகாயமடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை அங்கிருந்தவர்கள் மற்றும் தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கண்டமனூர் வேலாயுதபுரத்தை சேர்ந்த பால்ராஜ் (வயது 75), தங்கப்பாண்டி மனைவி செல்வம் (50), ஏரதிமக்காள் பட்டியை சேர்ந்த மாரியம்மாள் (60) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
கேரள இளைஞர் கைது
அரசரியை சேர்ந்த பாக்கியலட்சுமி (39) என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக அஜித்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications